டெல்லி ரெயில் கவிழ்ந்தது; 38 பயணிகள் படுகாயம் 8 பெட்டிகள் தடம் புரண்டனமத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.  இன்று அதிகாலை 2.07 மணிக்கு இந்த ரெயில் உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீர் என்று ரெயில் கவிழ்ந்தது. ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது.

அப்போது ரெயில் மெதுவாக சென்று கொண்டு இருந்ததால் உடனடியாக டிரைவர் ரெயிலை நிறுத்தி விட்டார். இந்த விபத்தில் 38 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.அருகில் உள்ள ரெயில் நிலையங்களில் இருந்து மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. ரெயில் பெட்டிகள் மீட்கப்பட்டு சேதம் அடைந்த தண்டவாளம் சரி செய்யப்பட்டு வருகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.