சவுதியில் வெளிநாட்டு கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழப்பு: உடல்களை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை சவுதி அரேபியாவில் மீன்பிடி படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில் ஆகியோர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டு கப்பல் ஒன்று இவர்களது விசைப்படகு மீது மோதியது.

இதில் படகு நொறுங்கியதுடன் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் சோகத்தில் மூழ்கியுள்ள 3 பேரின் குடும்பத்தினர், உடல்களை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே படகு விபத்தில் ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்ற 2 பேர் மாயமானதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக கேசவன்புத்தந்துரை மக்கள் கூறுகின்றனர். தமிழக அரசும், மத்திய அரசும் தூதரகங்கள் மூலம் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.