மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல் சோப்பு வியாபாரிகள் 3 பேர் பலிதிருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெரியகுடியை சேர்ந்த இளங்கோவன் மகன் தினேஷ் (வயது22). திருவாரூர் அருகே உள்ள நாகங்குடியை சேர்ந்த ராதா மகன் அருண்(22). புதுப்பத்தூரை சேர்ந்த மதியழகன் மகன் ஜெனிபர் (28). உறவினர்களான இவர்கள் 3 பேரும் சோப்பு விற்பனை செய்து வருகிறார்கள். பெரியகுடியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் 3 பேரும் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் பெரியகுடியில் இருந்து 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை தினேஷ் ஓட்டி சென்றார்.

இவர்கள் மன்னார்குடி அருகே ரெட்டப்புளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பழனியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த அரசு பஸ்சும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தினேஷ், அருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை
விபத்தில் படுகாயம் அடைந்த ஜெனிபரை, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக மன்னார்குடி-கோட்டூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.