கேரளா: ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் காயம் யாரும் சாகவில்லைகேரள மாநிலம் நடப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது, வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பாபு, சுதிர், வினீஷ் மற்றும் சுனில் ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த பாபு மற்றும் வினீஷ் ஆகியோர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் குந்தன் சந்த்ராவத், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிப்பேன் என பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.