துபாயில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவருக்கு ரூ. 44.57 லட்சம் அபராதம் !இந்தியாவைப் போலவே அமீரகத்திலும் பல கிளைகளுடன் செயல்படும் நிறுவனம் மலபார் கோல்டு ஹவுஸ். இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு நபர் தனது விடுமுறை கோரிக்கையை நிராகரித்தால் அதிலிருந்து விலகி வேறோரு நிறுவனத்திலும் பணிக்கு சேர்ந்துவிட்டார் என்றாலும் நெஞ்சிலே தங்கிய பழிவாங்கும் ஆத்திர உணர்வு மட்டும் போகவேயில்லை.

2015 ஆம் ஆண்டு வேறொரு நிறுவனம் பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கேக் வெட்டிக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதையறிந்த மேற்சொன்ன நபர் அந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியை தான் முன்பு பணியாற்றிய மலபார் கோல்டு ஹவுஸின் படத்துடன் முடிச்சுப் போட்டு சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறாக பரப்பியதை தொடர்ந்து அமீரகம் வாழ் இந்தியர்கள் மத்தியில் கசப்பும், இந்தியாவில் சில இடங்களில் இந்நிறுவனத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களும் நடைபெற காரணமாக அமைந்ததை தொடர்ந்து மலபார் கோல்டு ஹவுஸ் நிறுவனம் துபையிலும், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவிலும் வழக்குத் தொடர்ந்தது.

சமூக வலைத்தளங்களை (Social Media) தவறாக பயன்படுத்துவோருக்கு படிப்பினை தரும் விதத்தில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேற்படி அவதூறு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இந்த 36 வயதுடைய கேரள நபருக்கு எதிராக அறிந்து கொண்டே அவதூறு பரப்பிய குற்றத்திற்காக 2.5 லட்சம் திர்ஹம் ( சுமார் இந்திய மதிப்பு ரூ. 44.57 லட்சம் ) அபராதம், 1 வருடத்திற்கு முகநூல் பக்கம் முடக்கம் மற்றும் தண்டனைக்குப் பின் நாடு கடத்தப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்குப் பின் மீண்டும் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால் இதுவரை பார்த்து வந்த வேலையும் காலி.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.