கோவை அபுதாஹிர் சட்டவிரோத கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 47 பேர் கைதுதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் தொகுதி தலைவர் அகமதுமைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல்லத்தீப், மாவட்ட அமைப்பாளர் சேக்தாவூது, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சதாம்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விலாயத்உசேன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோவையில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை சட்டத்துக்கு புறம்பாக கடத்தி சென்று, சசிக்குமார் கொலை வழக்கில் பொய் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

47 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் கூத்தாநல்லூர் நகர தலைவர் அப்துல்ராஜித், நகர செயலாளர் ஜாகிர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.