அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 4அரபியர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பொதுவான வழிமுறையாக இருந்தது. வணிகக் குழுக்களின் பாதைகளில் பாதுகாப்பும், குலங்களுக்கிடையிலான அமைதி உடன்படிக்கையும் இருந்தால் மட்டுமே வணிகப் பயணங்கள் சாத்தியமாயின. இவ்விரு அம்சங்கள் தேவைப்படாத ஒரு வணிகக் காலம் இருந்ததெனில், அது தடை செய்யப்பட்ட புனித மாதங்களில் மட்டுமே..! அம்மாத காலங்களில், அரபியர்கள் ஒன்றுகூடும் வியாபாரச் சந்தைகளாக உக்காஸ், தில்-மஜாஸ், மிஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.
தொழில் துறைகளைப் பற்றிய அறிவு அரபியர்களிடத்தில் இருந்ததில்லை. எமன், ஹீரா மற்றும் ஷாம் (சிரியா) ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மேற்கொண்ட துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில்கள்மட்டுமே அரபியாவில் காணப்பட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் அரபிய தீபகற்ப உட்புறத்தின் சில பகுதிகளில் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும்,இந்த வணிகமும் போர்களின் காரணமாக நலிவுற்றிருந்தது. வறுமை, பஞ்சம் மற்றும் அணிவதற்கான போதிய ஆடை இல்லாமை ஆகியன ஓட்டுமொத்த அரபியாவின் பொருளாதார நிலையாக இருந்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.