உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர முத்துப்பேட்டை ஷேக்பரீத் கோரிக்கைஉலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின்  சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளரான முத்துப்பேட்டை ஷேக்பரீத்  கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த திமுக ஆட்சியில் உலமாக்களுக்கென்றே தனி நலவாரியம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்ஹாக்கள், ஆசீர்கானாக்கள், மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த உலமாக்கள் நலவாரிய திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.மாதம் ரூபாய் 750 வீதம் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ரூ.1000 ரூபாயாக உயர்த்தியது.

 தற்போது நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வாலும், கட்டுக்கடங்காத பொருளாதார சீர்கேட்டினாலும் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பயனாளிகளுக்கு போதுமானதாக இல்லை. ஆகையால் உலமாக்கள்  உதவித்தொகையை ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்து உலமாக்களின் நலன் காத்திட தமிழக அரசு  முனைய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.