அஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயனாளிக்கு ATM கார்டு, பாஸ் புத்தகம் !தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தஞ்சாவூர் அஞ்சலக கோட்டம் சார்பில் அஞ்சலக சிறு சேமிப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கியவர்களுக்கு அஞ்சலக கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகள், அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் மாண்புமிகு பாரத பிரதமரின் ஓய்வூதிய திட்டங்கள் போன்ற அஞ்சலக சேமிப்பு மற்றும் திட்டங்கள் தொடர்பான முகாம் மாவட்ட ஆட்சியரக பணியாளர்கள், பொது மக்கள் திரளனார் கலந்து கொண்டனர்.

சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆகும். கணக்கு தொடங்கியவுடன் ஏடிஎம் கார்டுடன் அஞ்சலக கணக்கு புத்தகம் உடனடியாக வழங்கப்படும். பொன் மகன் பொது வைப்புத்திட்டம், தொடர் வைப்புக் கணக்கு போன்ற வசதிகளும் அஞ்சலகத்தில் உள்ளது.

இம்முகாமில் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் பசுபதி, மெயில் ஓவர்சீயர் அய்யாக்கண்ணு, மக்கள் தொடர்பு அதிகாரி கே.நீலவண்ணன் யாதவ், அலுவலக ஊழியர்கள் மீரா, சரண்யா, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.