புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை தயாரிக்க செலவாகும் தொகை எவ்வளவு தெரியுமா?நாமெல்லாம் தவமாய் தவமிருந்து, ஏ.டி.எம். வாசலில் நின்று, பெற்ற 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 ரூபாய் தான். இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வாலே சொல்லி இருக்கிறார்.

புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஒரு நோட்டிற்கு 2.87 ரூபாய் முதல் 3.77 ரூபாய் வரை செலவாவதாக கூறியுள்ளார்.

அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால், புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த ரூ.500, ரூ. 2000 நோட்டுக்களின் மதிப்பு, இப்போது தெரியாது என கூறியுள்ளார்.

பிப்ரவரி 24, 2017ன் படி, இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கரன்சியின் மதிப்பு 11.64 லட்சம் கோடி ஆகும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு,  டிசம்பர் 10, 2016 கணக்கின்படி ரிசர்வ் வங்கி பெற்ற செல்லாத நோட்டுக்களின் மதிப்பு 12.44 லட்சம் கோடி ஆகும்.

நோட்டுக்கள் அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்படும், பேப்பர்களை சில குறிப்பிட்ட சப்ளையர்கள் வழங்குவதாகவும், அவர்கள் வேறு யாருக்கும் அதே போன்ற காகிதங்களை வழங்குவதில்லை என்றும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

ஜனவரி 4, 2017 காலகட்டம் வரை, நாட்டில் மொத்தம் 2.18 லட்சம் ஏ.டி.எம். இயந்திரங்கள் இருந்த நிலையில், அதில் 1.98 லட்சம் ஏ.டி.எம். இயந்திரங்கள் புதிய 500, 2000 நோட்டுக்களை வினியோகிக்கும் வகையில் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.