அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 9அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!

பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரைஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய பொன் மொழிகளுள்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய                 பொன் மொழிகள்
அப்துல் முத்தலிப் அவர்களின் வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகள்!

1. ஜம்ஜம் – கிணற்றை தோண்டுதல். ஒரு முறை, குறிப்பிட்டதொரு இடத்தில் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுமாறு, அப்துல் முத்தலிப் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை கிடைத்தது.அவரும் அவ்வாறே செய்ய, அதன் பின்னர், புனித யாத்திரிகர்களுக்கு ஜம்ஜம் நீரை வழங்கும் வழக்கமும் உண்டானது.

2. யானை நிகழ்வு: எமன் நாட்டில் இருந்த அப்ரஹா அல்-ஹபஷி எனும் அபீசீனிய (எத்தியோப்பிய) ஆளுநர் தொடர்பான இந்த பிரபல்ய வரலாற்று நிகழ்வு நடந்தது. கஅபா-விற்கு அரபியர்கள் பெருந்திரளாக புனிதப் பயணம் மேற்கொள்வதைக் கண்ட அவன், அவர்களின் பயணத்தை தனது நாட்டுக்கு திசைதிருப்பும் நோக்கத்துடன், எமன் நாட்டின் ஸனா-வில் ஒரு மாபெரும் தேவாலயத்தை எழுப்பினான். கினானா குலத்தைச் சேர்ந்த ஒருவன் அவனுடைய இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டான்.எனவே, ஒரு நாள் இரவில் தேவாலயத்தினுள் நுழைந்து, அதன் முன்பக்க சுவரை கொண்டு சேதப்படுத்திவிட்டான். இதனைக் கேட்ட அப்ரஹா கடுஞ்சினம் கொண்ட வெகுண்டெழுந்தான். அறுபதாயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் படையுடன், கஅபாவை இடிக்கப் புறப்பட்டான். அவனுடைய படையில் ஒன்பது அல்லது பதிமூன்று யானைகளும் இருந்தன.தனக்காக ஒரு பெரிய யானையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். முஸ்தலிஃபாவிற்கும் மினாவுக்கும் இடைப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை அடையும் வரை தொடர்ந்து பயணித்தது அவன் படை. ஆதன் பின்னர், அவனது யானை மேலும் நகர்ந்து செல்லாமல், மண்டியிட்டு அமர்ந்து முரண்டு பிடித்தது. அதனை கிழக்கு, வடக்கு அல்லது தெற்குப் பக்கமாக நகர்த்தும்போதெல்லாம் உடனே நகர ஆரம்பித்தது. ஆனால், மேற்கு திசையில் கஅபா-வை நோக்கி நகரச் செய்ய முயன்றால், மேலும் முன்னேறிச் செல்லாது மண்டியிட்டு அமரந்து கொண்டது. அதேவேளை, அல்லாஹ், அப்படையினரை நோக்கி பறவைக் கூட்டத்தை அனுப்பினான். அவை சுட்ட களிமன் கற்களை அந்தப் படையினர் மீது எறிந்தன. இந்த தாக்குதலால் அப்படை, அறுத்தெறியப்பட்ட புற்களாக ஆகியது. அந்தப் பறவைகள், உருவத்தில் குருவி மற்றும் சிட்டுக்குருவி போன்று இருந்தன. ஒவ்வொன்றும் மும்மூன்று கற்களை சுமந்து வந்தன. ஒன்று அவற்றின் அலகுகளிலும், மற்ற இரண்டும் அவற்றின் இறக்கைகளிலும் சுமந்து வந்தன. அந்த கற்கள் அப்ரஹா-வின் படைவீரர்களின் முதுகெலும்புகளைப் பதம் பார்த்தது. அவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு மாபெரும் எண்ணிக்கையிலான படையினர் இவ்வாறு கொல்லப்பட, மற்றவர்களோ, அங்கும் இங்கும் தப்பியோடத் தலைப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் கொல்லப்பட்டனர். சுயம் அப்ரஹாவே. தனது விரல்நுனிகளில் காயப்படுத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டான். ஆவன் ஸனா-வை அடைந்தபோது, பீதியடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, மிக விரைவிலேயே மரணத்தைத் தழுவினான். இந்த யானை நிகழ்வு, முஹர்ரம் மாதத்தில், அண்ணலார் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு, ஐம்பது அல்லது ஐம்பத்தைந்த நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

3. அப்துல்லாஹ்: அண்ணலார் (ஸல்) அவர்களின் தந்தையாகிய இவர், அப்துல் முத்தலிப் அவர்களின் புதல்வர்களிலேயே மிகவும் சிறந்தவராக விளங்கியவர். இவருக்கு ‘தாபிஹ்’ (தியாகி) எனும் சிறப்புப் பெயரும் உண்டு. ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுமாறு கனவின் மூலம் தனக்குக் கிடைத்த கட்டளையை நிறைவேற்ற, அப்துல் முத்தலிப் முயன்றார். அதனை மீண்டும் கண்டுபிடித்து நிர்மாணிப்பதில் பிற குறைஷியரும் உரிமை கொண்டாட முயற்சித்தனர். இதனால், இப்பிரச்னையிலிருந்து குறைஷியர் விலகி, ஜம்ஜம் கிணற்றைத் தான் மீண்டும் தோண்ட அனுமதித்தால், தனது பத்து புதல்வர்களில் ஒருவரை பலியிடுவதாக நேர்ச்சித்துக் கொண்டார்.இறுதியில், அப்துல் முத்தலிப், அதனைக் கண்டெடுத்து வெற்றி கண்டார்.பின்னர், தனது இரகசிய நேர்ச்சையை தன் புதல்வர்களிடம் கூற, அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். புதல்வர்களில் ஒருவரைப் பலியிட, அப்துல் முத்தலிப் சீட்டு குலுக்கியபோது.., அப்துல்லாஹ் அவர்களின் பெயர் வந்தது.ஆனால், குறைஷியரும், அவருடைய தந்தையரும், சகோதரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அதற்குப் பகரமாக, நூறு ஒட்டகங்களைப் பலியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
வஹாப் என்பாரது புதல்வியான ஆமீனா எனும் நல்லாளை, அப்துல் முத்தலிப் தனது மகன் அப்துல்லாஹ்-வுக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தார். பனீ ஜஹ்ரா கோத்pரத்தின் தலைவரான வஹாப் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார். மணமக்கள், மக்காவில் மணமுடிக்கப்பட்ட பின்னர், அப்துல்லாஹ்-வை, பேரீத்தம்பழ வணிகம் நிமித்தமாக மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார் அப்துல் முத்தலிப். அங்கு அவருடைய மரணம் நிகழந்தது. இன்னும் சில பதிவுகளில், அப்துல்லாஹ் அவர்கள் வியாபாரம் நிமித்தமாக. சுpரியா சென்று திரும்பும் வழியில், மதீனா-வில் மரணித்ததாக வருகின்றது. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து மட்டுமே! பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அவருடைய மரணம், அண்ணலார் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு இரண்ட மாதங்கள் முன்பாக நிகழ்ந்தது. தனது மகனுக்காக அப்துல்லாஹ் அவர்கள் விட்டுச் சென்றது எவை தெரியுமா..? மிக சொற்பமான அளவு செல்வமே! – ஐந்து ஒட்டகங்கள், சிறிய எண்ணிக்கையிலான ஆடுகள், ஒரு பணிப்பெண், பரகா-உம்மு அய்மன் என்று வழங்கப்பட்ட இவர், பின்னாளில் அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பை மனமுவந்து செய்தார்.
அன்னாருடைய பிறப்பு

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.