வன்முறையில் முடிந்த ஹிஜாபிற்கு எதிரான ABVP காவி துப்பட்டா போராட்டம்கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் ABVP யினர் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக காவி சால்வைகளை அணிந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்தின் போது வகுப்பிற்கு காவி சால்வை அணிந்து வராத மாணவர் ஒருவர் மீது ABVP யினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பட்களில் உள்ள Government First Grade கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BA பட்டப்படிப்பு படித்து வருபவர் ஜெயந்த் நைகா. இவர் கடந்த புதன் கிழமை கல்லூரிக்கு காவி சால்வை அணியாமல் வந்துள்ளார். இதனையடுத்து இவரை சூழ்ந்து கொண்ட ABVP யினர் இவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளர். அவர் தனது புகாரில் குற்றம் சாட்டிய நபர்கள்  நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுளளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.