முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியவர் கைதுமுத்துப்பேட்டை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோபாலசமுத்திரம் கோரையாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தில்லைவிளாகம் இந்திரா நகரை சேர்ந்த ரெத்தினம் (வயது 41) என்பதும், அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெத்தினத்தை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.