பள்ளிவாசல் சொத்தை மீட்டு கொடுங்கள்... அல்லது அப்சல் குரு, யாகூப் மேமன் வரிசையில் எனக்கும் ஒரு இடம் கிடைத்திட பரிந்துரை செய்யுங்கள்..!திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள்..!!

48 வயதை பூர்த்தி செய்துவிட்ட ஜாகிர் ஹுசைன் ஆகிய என் மீது நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு சிறிய பெட்டி கேஸ் வழக்கு கூட இல்லை.

தங்களை போலவே இம்மாவட்டத்தில் பணிபுரிந்த IAS அதிகாரி ஒருவரிடமிருந்து நற்சான்று பத்திரம் பெற்றுள்ளேன்.

காவல்துறையால் சமீப காலத்தில் பெறப்பட்ட 'NOC'யும் கையில் வைத்துள்ளேன்.

நான் பாகிஸ்தான் சென்றதும் இல்லை; பயிற்சிகள் எதனையும் பெற்றதுமில்லை.

எனினும், நான் கைது செய்யப்படவோ, காணாமல் போகவோ, காட்டுப்பகுதியிலிருந்து எனது சடலம் கண்டெடுக்கப்படவோ கூட வாய்ப்பிருக்கிறது.

வழக்கம்போல நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், அல்காயிதா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ISIS, தொடர்புகளுடன் கலெக்டர் அலுவலகத்தை குண்டுவைத்து தகர்க்க சதி செய்தல், உள்ளிட்ட பிணையில் வெளிவரமுடியாத,

முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக பயன்படுத்தவென்றே இயற்றப்பட்டுள்ள விசேஷ கருப்புச்சட்டங்கள் எனக்கெதிராக பாயும் வாய்ப்புகள் கூட பிரகாசமாகவே தெரிகிறது.

எனது குடும்பத்தினருக்கு நான் அளித்துள்ள கட்டாய அறிவுரை:

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஜாமீன் பெற முயற்சிக்கக் கூடாது; கண்டிப்பாக நிராகரிக்கப்படுகின்ற கருணை மனுக்கள் எதையும் யாருக்கும் அனுப்பவும் கூடாது.

பள்ளிவாசல் சொத்தை அபகரித்துள்ள தனியார் ஒருவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல்பட்டு...

பள்ளிச்சொத்து கண்ணெதிரே களவு போவதை பார்த்துக்கொண்டு நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்..?

இந்து-முஸ்லிம் பாரபட்சமில்லாமல் திருவள்ளூர்வாசிகள் அனைவருக்குமே தெரிந்துள்ள 'வக்ப் சொத்து ஆக்கிரமிப்பு' பிரச்சினை, தங்களுக்கு தெரியாது என்று தாங்கள் கூறுவதை எனது அல்லாஹ்விடம் சென்று முறையிடவே விரும்புகிறேன்.

நன்றி,
ஜாகிர் ஹுசைன்
தலைவர், அஹ்மத்ஷா படேமகான் பள்ளிவாசல்
திருவள்ளூர்.
9380945727
9444781644

https://m.facebook.com/story.php?story_fbid=1273784202708767&substory_index=0&id=246687175418480

https://m.facebook.com/story.php?story_fbid=1274749165945604&substory_index=0&id=246687175418480

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.