மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் ஓர் தேசம்.09-07-2011 ஆம் நாள் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தேசம் ஒன்றின் வரலாறு மாற்றி எழுதப்படுகின்றது ஒரு பக்கம் சோகமும் மறு பக்கம் மகிழ்ச்சியும் புரையோடிக் கொண்டிருந்த வேளை

பிரித்தாழும் சூழ்ச்சியில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியமோ இருமாப்புடன் பறைசாட்டியது சூடானில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டதன்று..

ஆம் அன்றுதான் ஒன்றுபட்ட ஓர் தேசம் இரண்டாக பிளவு படுகின்றது ஆப்பிரிக்காவின் நீண்ட வரலாற்றுப் பின்னனியை கொண்ட நாடுகளில் ஒன்றுதான் சூடான். அதன் வடபகுதி துறைமுகம், விமானநிலையம், தலைநகரம் போன்றவற்றுடன் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்களை கொண்டிருந்த அதேவேளை தென்பகுதியோ நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியான எண்ணை வளத்தையும் பெருமளவிலான கிறிஸ்தவர்களையும் கொண்டமைந்தது.

சூடானின் எண்ணை வளம் மீதான  ஏகாதிபத்திய வல்லறசுகளின் கழுகுப்பார்வை பட்டுத் தெறிப்படையும் போதெல்லாம் அதற்கு தடையாக நின்றவர்தான் அதிபர் ஒமர் அல் பஸீர்
சூடானின் எண்ணை வளத்தை கொள்ளையடிக்க வேண்டுமனில் முதலில் ஷரியா சட்டத்தினையும் அதன் அதிபரையும் இல்லாதொழிக்க வேண்டும்  அதற்கான தருனத்தை எதிர்பார்த்துக்  காத்திருந்த ஏகாதிபத்திய வல்லறசுகளின் தீராப் பசிக்கு இரையாகிப்போன  பிராந்தியம்தான் darfur.

தொன்று தொட்டு அங்கு வாழும் இனங்களுக்கிடையே இடம்பெற்று வரும் கால்நடைகள் தொடர்பான பிரச்சினைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேற்கத்திய வல்லூறுகளோ அப்பிராந்தியத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களை உருவாக்கி நவீன ஆயுத வசதிகளுடன் முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவும் களம் காண்கின்றனர்.

போராட்டம் உக்கிரமடைகின்றது தொடர்தேர்ச்சியான உள்நாட்டு மோதல்களுக்குள் சிக்குன்ட சூடானோ பல்லாயிரக்கணக்கான பெண்களின் கற்புகளையும் பல லட்சக்கணக்கான உயிர்களையும் காவு கொடுத்து பரிதவிக்கத் தொடங்கியது.

இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஏகாதிபத்திய வல்லறசுகளோ சூடான் ஜனாதிபதிக்கு எதிராக காய்களை நகர்த்த தொடங்கின. அதன் உச்ச கட்டம்தான் தென்சூடான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது அத் தீர்மானத்தின் பிரதான அங்கமே தென்சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து அதனை தனி நாடாக பிரிப்பதாகும்.

முதலில் இத்தீர்மானத்தை  ஏற்க மறுத்த சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஸீரோ தனது நாட்டு மக்கள் அநியாயமாக கொள்ளப்பட்டு வருவதை சகித்துக்கொள்ள முடியாமல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தினை ஏற்று தென் சூடானை தனிநாடாக பிரிக்க சம்மதம் தெரிவிக்கின்றார்

09-07-2011 அன்று தென்சூடான் தனிநாடாக உதயமாகின்றது அதன் ஜனாதிபதியாக கிளர்சிக்குழுவின் தலைவர் சல்வாகீர் பதவிப்பிரமானம் செய்து கொள்கின்றான்.

இருந்தும் ஏகாதிபத்தியத்தின் ஆத்திரமோ சூடான் வளங்கள் மீதான அடங்காத வெறியோ ஓயவில்லை உள்நாட்டு மோதல்களின் போது தனது நாட்டு மக்களையே கொன்று குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரனை முன்னடுக்கப்பட்டு குற்றவாளியாக்கப் படுகிறார்

சர்வதேச பிடியானை, ராஜதந்திர தடைகளன பல்வேறு சவால்களை எதிர்கொண்டும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான அவர் குரல் மட்டும் ஓயவில்லை இன்றும் அதே மக்கள் செல்வாக்குடன் கம்மீரமாகத்தான் ஒழித்துக் கொண்டிருக்கின்றது அந்த குரல்

சூடான் இரண்டாக பிரிக்கப்பட்டு விட்டது .

வடசூடான் பஸீரின் ஆட்சியில் செழிப்புற்று விளங்குகின்றது தென் சூடான் பசி, பட்டினி, வறுமை, கிளர்ச்சிக்குழுக்களின் அட்டகாசங்கள், தொடர்தேர்ச்சியான உள்நாட்டு மோதல்களினால் சிக்குன்டு மரனத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றது. இதுதான் ஏகாதிபத்தியம் அந்த நாட்டில் நிலைநாட்டிய போலி ஜனநாயகம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.