சமூக ஊடகங்களில் செயல்படும் ஃபலஸ்தீனியர்களை கைது செய்யும் இஸ்ரேல்ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய அரசு, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராக பல்வேறு துன்புறுத்தல்களையும் மனித உரிமை மீறல்களையும் செய்து வருகின்றது. அதிலும், இஸ்ரேல் அரசு செய்யக்கூடிய அத்துமீறல்களை சமூக வலைதளங்கள் மூலம் ஃபலஸ்தீனியர்கள் வெளியுலகுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இதில், ஃபலஸ்தீனிய இளைஞர்களும், இளம் பெண்களும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதற்கெதிராகவும் இஸ்ரேலிய அரசு சமீப காலங்களில் அதிகமாக கவனம் செலுத்துகின்றது. சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடும் இளைஞர்களையும் யுவதிகளையும் கண்காணித்து அவர்களை கைது செய்து, நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் தற்பொழுது தொடங்கி தீவிரமாக செய்து வருகின்றது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில்  ஃபலஸ்தீனில் உள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமான பேர் இஸ்ரேலிய உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலும் இளைஞர்கள். இந்த ஆய்வை அரபு சென்டர் ஃபார் சோஷியல் மீடியா அட்வான்ஸ்மெண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 19 சதவீதம் இளைஞர்களில் 15லிருந்து 25 வரையுள்ளவர்கள் விசாரணை செய்யப்பட்டு, உளவு நிறுவனத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆய்வை ஆக்கிரமிப்பு ஃபலஸ்தீனான மேற்கு கடற்கரை மற்றும் காஸா ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளிலுமே ஃபலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 20 சதவீதமாகும். கைது செய்தவர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மற்றும் ஃபலதீனியன் அதிகாரப்படை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். 35 சதவீத ஃபலஸ்தீன இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டனர் என்று அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதனுடைய காரணம் ஃபலஸ்தீனை முழுவதுமாக ஜியோனிச நாடாக மாற்றுவதற்குண்டான வேலைகளுக்கு தடையேற்படுமோ என்ற காரணத்தினாலேயே இது நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. விசாரணையில் கூட மிகவும் கொடூரமான, வக்கிரமமான கேள்விகள் எல்லாம் கேட்கப்படுவதாக கூறப்படுகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கடந்த ஆண்டுகளை விட தற்பொழுது அதிகரித்திருப்பதாகவும் தெரிகின்றது. ஏனென்றால், அமெரிக்காவில் தற்பொழுது அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் இஸ்ரேலுக்கு புது உத்வேகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஊடக கண்காணிப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் ஒன்றையும் குறிப்பிடுகின்றார்கள். அது என்னவென்றால், டேரியன் டாட்டூவர் என்ற ஃபலஸ்தீன கவிஞர், ஃபேஸ்புக்கில் ஃபலதீனத்தை பற்றி எழுச்சியுறும் விதமாக கவிதை ஒன்றை தயாரித்து பதவிட்டார் என்பதற்காக கைது செய்து, 16 இஸ்ரேலிய சிறையில் வைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது, அவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தான் இதில் வேடிக்கையான விஷயமாகும்.

அந்த கவிதைக்கு அவர் வைத்திருந்த தலைப்பு என்னவென்றால், ‘எழுச்சி பெறுவோம்’ என்பது தான். இது ஃபலஸ்தீனியர்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்துள்ளது. அதாவது, ஃபலஸ்தீனை ஆக்கிரமித்து, சூழ்ந்து இருக்கும் இராணுவத்தினரை எதிர்த்து, எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தான் அந்த கவிதையை அவர் பதிவிட்டிருந்தார்.

நன்றி  -ஏர்வை சலீம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.