முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு பைபாஸ் -செம்படவன்காடு வரை சாலையை செப்பனிட வேண்டும்முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு பைபாஸ் முதல் செம்படவன்காடு வரை நெடுஞ்சாலையை செப்பனிட வேண்டுமென வர்த்தகர் கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முத்துப்பேட்டை வர்த்தகக் கழக செயற்குழு கூட்டம் தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் நெய்னா முகமது, மெட்ரோ மாலிக் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், முத்துப்பேட்டையில் நகரத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான ஆலங்காடு பைபாஸ் முதல் திருத்துறைப்பூண்டி சாலை, புதிய பேருந்து  நிலையம், பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் செம்படவன்காடு வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமாகி உள்ளது. இதனை சரி செய்வதாக கூறி சாலைப்பணியாளர்கள் பெயரளவில் பணியை செய்துவிட்டு செல்வதால் மீண்டும் மீண்டும் சாலை சேதமாகி விடுகிறது.

எனவே உடனடியாக சேதமாகி உள்ள இந்த சாலையை முழுமையாக செப்பனிட வேண்டும். காலம் கடத்தினால் விரைவில் வர்த்தகக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் கண்ணன் மாதாந்திர செயல் அறிக்கை வசித்தார். துணைச் செயலாளர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், மீனா கணேசன், இர்பான் ஹைதர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் பழனித்துரை நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.