வரதட்சணையை திருப்பி கொடுத்த இஸ்லாமியர்கள்: இனிவாங்கவும் மாட்டோம்- ஜார்கண்டில் புரட்சி!ஜார்கண்டில் 300 இஸ்லாமிய குடும்பங்கள் திருமணத்தில் வாங்கிய வரதட்சணையை திருப்பிகொடுத்ததோடு வரதட்சணைக் கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு என்ற பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். திருமணத்தின்போது அதிகளவில் வரதட்சணை கொடுத்து

பெண்களை திருமணம் செய்து வைப்பது முஸ்லிம்களிடம் காணப்படும் வழக்கமான நடைமுறையாகும். இந்த வழக்கத்தால்
முஸ்லிம் பெண்களின் நிலை பரிதாபமான சூழலில் உள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் உண்டு. இந்த சூழலில் ஜார்கண்டில் உள்ள
லாட்டிஹார்மாவட்டத்தில் பொக்காரி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜி மும்தாஜ் அலி என்பவர் வரதட்சணைக்கு எதிராக கடந்த ஏப்ரல் முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இதன்பலனாக இங்குள்ள பாலமு என்ற பகுதியில் இருக்கும் இஸ்லாமிய பெரியவர்கள் ஒன்றுதிரண்டு, தங்கள் மகன்களின் திருமணத்தில் வாங்கிய
வரதட்சணையை வசூலித்தனர்.
ரூ. 6 கோடி வசூலானது. இந்தத் தொகைய 800 மருமகள்களின் பெற்றோரைத் தேடிசென்று அவர்களிடம்
ஒப்படைத்து அசத்தினர். இதுமட்டுமின்றி இனிமேல் வரதட்சணை இல்லாமல்தான் திருமணம் என்று வாக்களித்துள்ளனர்.
ஏழைகளை கொன்றொழிக்கும் வரதட்சணையை முற்றிலும் துடைத்தெறியும் வரை வரதட்சணைக்கு எதிரான போர் தொடரும் என்று மும்தாஜ் அலி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.