எருமை மாட்டின் மீது மழை... திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் நிலை..!எருமை மாட்டின் மீது மழை...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் நிலை..!

இரண்டில் ஒன்று பார்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை..!!
திருவள்ளூரில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான ₹ 100 கோடி மதிப்புடைய சொத்து சட்டவிரோத அபகரிப்பு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்.

இதை கண்டித்து கடந்த திங்களன்று(27-03-2017), அபூபக்கர் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் 'கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்' நடத்தப்பட்டதுடன் அன்றைய தினமே மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, வக்ப் சொத்தை மீட்டுக் கொடுக்கும்படி அபூபக்கர் 'எம்.எல்.ஏ' வலியுறுத்தினார்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் திருமதி சுந்தரவள்ளி அவர்கள், வக்ப் நிலத்தில் நடக்கும் பணிகள் உடனடியாக ஒரே நாளில், தாசில்தார் மூலம் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
அத்துடன் சம்மந்தப்பட்டவர்களுக்கும் நமக்கும் சம்மன் அனுப்பி 7 நாட்களுக்குள் உரிய விசாரனை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

ஆனால், 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் வேலைகளும் நின்றபாடில்லை; விசாரனைக்கான சம்மன் எதுவும் நமக்கு வந்து சேரவுமில்லை.

முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்கள் சூறையாடப்படுள்ளதும், அதை தட்டிக் கேட்கவேண்டிய அரசு மவுனம் சாதிப்பதும் எங்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

திருவள்ளூருக்கு நேரில் வந்து சென்ற பிறகு, இங்குள்ள நிலை குறித்து அபூபக்கர் எம்எல்ஏ அவர்கள், அவ்வப்போது தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்குவது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.