சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தினால் கடும் நடவடிக்கை : பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கைசமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தி கருத்து வெளியிட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மத நிந்தனை மற்றும் மதத்தின் புனிததன்மையை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள இஸ்லமபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், முஸ்லீம் மதத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் மேற்கண்ட வழிகாட்டலை உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கானுக்கு பிறப்பித்துள்ளார். தனது உத்தரவில், இந்த பயங்கர குற்றங்களுக்கு பின்னணியில்  இருப்பவர்கள் மீது எந்த தாமதமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.