ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை அபேஸ்: இளம்பெண் கைதுதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கறம்பியத்தை சேர்ந்தவர் ராஜகுமார். இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது. நேற்று புனிதா தனது குழந்தையுடன் பட்டுக்கோட்டை சென்றார். அங்குள்ள நகை கடையில் ஒரு பவுன் செயின், மற்றும் மோதிரம் வாங்கினார். அதனை பையில் வைத்து கொண்டு பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. புனிதா குழந்தையுடன் நிற்க சிரமப்பட்டார். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண் புனிதாவிடம் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்டார்.

புனிதாவும் குழந்தையை கொடுத்தார். மேலும் இளம்பெண் அருகில் நகை பையையும் வைத்தார். பஸ் வில்லுமுக்கம் என்ற இடத்தில் வந்த போது பஸ்சில் அமர்ந்திருந்த இளம் பெண் குழந்தையை புனிதாவிடம் கொடுத்து விட்டு இறங்கினார்.

அவர் இறங்கி சென்ற சற்று நேரத்தில் புனிதா தனது பையை பார்த்த போது அதில் மோதிரம், செயின் வைக்கப்பட்டு இருந்த பர்சை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டார்.

உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து குழந்தையுடன் இறங்கிய புனிதா அங்கு நின்று கொண்டிருந்த ஆம்பலாப்பட்டு இளைஞர்களிடம் தனது நகையை இளம்பெண் அபேஸ் செய்து விட்டதாக கூறினார்.

உடனே இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று நகையை அபேஸ் செய்த இளம் பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் பாப்பாநாடு போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தார். அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் பேச்சியம்மாள் (22) சொந்த ஊர் ராமநாதபுரம். தற்போது திருச்சிற்றம்பலத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இவர் கோவில் கும்பாபிஷேகம், திருவிழா போன்ற இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கைதான பேச்சியம்மாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.