ஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்கள் மீண்டும் அனுமதிமுஸ்லீம்களின் புனித யாத்திரையான ஹஜ் கடமைகளை நிறைவேற்ற ஈரானியர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டு வருகின்றதையொட்டி ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் அந்நாட்டிலிருந்து வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு புனித மண்ணில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற தேவையற்ற நிபந்தனைகளை விதித்து ஹஜ் யாத்திரையை ஈரானிய அரசு புறக்கணித்ததால் ஈரானியர்கள் யாரும் நேரடியாக பங்குபெற முடியாமல் போனாலும் உலகெங்கும் பரந்து வாழும் ஈரானியர்களில் கணிசமானோர் கலந்து கொண்டனர்.

ஹஜ் யாத்திரைகளின் போது நடைபெறும் சில விபத்துக்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களின் பின்னனியில் ஈரானியர்களே இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது மேலும் சிரியா, ஏமன், ஈராக் மற்றும் பஹ்ரைன் போன்ற முஸ்லீம் நாடுகளில் நடைபெறும் முஸ்லீம்களுக்கு எதிரான ஷியா தீவிரவாத குழுக்கள் மற்றும் அரசுகளுக்கு பகிரங்கமாகவே ஈரானிய அரசு உதவி வருகின்ற நிலையிலும் சவுதி அரசு பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், உலகெங்கிலிருந்தும் வரும் புனித ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ஈரானியர்கள் மீதான கூடுதல் கண்காணிப்பிற்கும் சவுதி அரசு போதிய ஏற்பாடுகளை செய்யும் என நம்புகிறோம்.

Source: Saudi Gazette
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.