சாலை விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் ஜெய்னுலாப்தீன் பாரிஸ் பலிபுதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன்(17)தந்தை பெயர் அகமது அலி அதே ஊரை சேர்ந்தவர்  பாரிஸ்(17)தந்தை பெயர் நெய்னா முகம்மது இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.இதில் ஜெய்னுலாப்தீன் என்பவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பும் பாரிஸ் என்பவர் மணமேல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்நிலையில் பாரிஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியில் படித்து வரும் ஜெய்னுலாப்தீன் என்பவரை ஏற்றிக்கொண்டு அம்மாப்பட்டினத்தை நோக்கி சென்றனர்.அப்போது ஓடாவிமடம் அருகே சென்ற போது வேளாங்கன்னியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது.இதில்   ஜெய்னுலாப்தீன் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் படுகாயம் அடைந்த பாரிஸ் என்பவர் சாலையில் கிடந்துள்ளார் இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு வேன் பாரிஸ் மீது ஏறியது இதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

பைக் மரணம் எத்தனை நடந்தாலும் பிள்ளைகளுக்கு அறிவு வருவதே இல்லை. பெற்றோர்களுக்கும் எந்த அக்கரையும் இல்லை போலும். மிகுந்த கவலையளிக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.