அதிரையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை வளைத்து பிடித்த ஆர்.டி.ஓ!அதிரையில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக பள்ளி பருவ மாணவர்களே விபத்தில் சிக்குகின்றன.  இது குறித்து பலமுறை சமூக ஆர்வலர்கள் பலதரப்பினருக்கும் புகார் அளித்தவண்ணம் இருந்துகொண்டிருக்கின்றனர்

இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அதிரையில் முக்கிய இடங்களில் திடீர் ஆவண சரிப்பார்ப்பில் ஈடுபட்டனர். இதில் முறையான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சிறுவர்கள் என பலரை பிடித்து அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கையினை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.