முத்துப்பேட்டையில் கடல் மீனவர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பு கூட்டம்முத்துப்பேட்டையில் மாவட்ட கடல் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. மீனவர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் துறைக்காடு இஸ்மாயில், ஜாம்புவான்னோடை முனியப்பன், சுதா, ஆலங்காடு வடிவேல், கவிதா, கற்பகநாதர்குளம் செல்வராசு, தொண்டியக்காடு தங்கராசு, செங்காங்காடு சண்முகம், வடக்கு வெள்ளாதிக்காடு தட்சிணாமூர்த்தி, ஹேமலதா, கீழவாடியக்காடு பாஸ்கர், முத்துப்பேட்டை ஆரோக்கியமேரி பங்கேற்றனர்.

கூட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட அமைப்புக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக இஸ்மாயில், மாவட்ட துணைத்தலைவராக செல்வராசு, பொருளாளராக முனியப்பன் தேர்வாகினர். மேலும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து மாவட்ட தலைவர் இஸ்மாயில் கூறுகையில்: இதுவரை கடல் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அந்தந்த பகுதி அளவில் மட்டுமே திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்தது தற்போது மாவட்ட அளவில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளோம்.  அரசு மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் மீனவர்களுக்கு சென்றடையும் வகையில் மாவட்ட அமைப்பு செயல்படும் என்றார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.