அமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை !சமீபத்தில் அமெரிக்க மோடி என அழைக்கப்படும் டொனால்டு டிரம்பின் இனவெறிச் சட்டத்தால் சில முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அகதிகள் அமெரிக்காவுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அநியாய தடையை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றங்களும், பொது மக்களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல் அரபு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐபேட், மொபைல் போன்கள், கேமராக்கள் போன்றவற்றை கேபின் பேக்கஜ் (Cabin Baggage) ஆக விமானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரு பயணி தன்னுடன் ஒரேயொரு சிறிய மொபைல் போன் மற்றும் சிறிய ரக மருத்துவ உதவிக்கான கருவி (Medical Kit) ஒன்றைத் தவிர பிற எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல உடனடி தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை அமெரிக்கா செல்லும் விமானம் தவிர பிற தடங்களில் பின்பற்றப்படாது வழமைபோல் தொடரும் எனவும் சில அரபு நாட்டு விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

இந்த திடீர் தடையால் அபுதாபி, துபை (அமீரகம்), ஜெத்தா, ரியாத் (சவுதி அரேபியா), கெய்ரோ (எகிப்து), அம்மான் (ஜோர்டான்), குவைத், காஸபிளங்கா (மொரோக்கோ),தோஹா (கத்தார்), இஸ்தான்புல் (துருக்கி) ஆகிய நகரங்கிலிருந்து செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்காட்டியின் ஆட்சியில் இன்னும் பல கேனத்தனமான சட்டங்கள் வரும்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.