முத்துப்பேட்டையில் கடும் வறட்சி வைக்கோல் விலை மூன்று மடங்கு உயர்வு அதிக விலைக்கு விற்பனைஇதுகுறித்து விவசாயி குன்னலூர் வடுகநாதன் கூறுகையில்: இந்தாண்டு கடும் வறட்சியின் காரணமாக கருகிய பயிர்கள் போக மீதி பயிர்களை காப்பாற்றி சொற்ப நெல்மணிகளை இப்பகுதி விவசாயிகள் சேகரித்து இருந்தாலும் தாங்கள் பட்ட கடனை அடைக்க அதனை விற்கும் சூழ்நிலை உருவாகி விட்டது. அதே போல் கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் கூட தங்களது வயலில் உள்ள வைக்கோல்களை விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டன. நாங்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாதது போல் கால்நடைகளுக்கும் வழியில்லாமல் போகிவிட்டது.

இங்கிருந்து இந்த வைக்கோல்கள் பல இடங்களுக்கு பொருட்கள் தயாரிக்க அதிக விலை கொடுத்து எடுத்து செல்கின்றனர்.அதிக காசு கிடக்கிறதே என்ற எண்ணத்தில் அதனை ஓவ்வொரு விவசாயியும் விற்கின்றனர். அரசும் மவுனமாக உள்ளது என்றார்.

முத்துப்பேட்டை :  முத்துப்பேட்டையில் கடும் வறட்சியால் வைக்கோல் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் வைக்கோல் வாங்க முடியாமல் அவதியடைகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால் இப்பகுதியில் உள்ள 75சதவீதம் பயிர்கள் கருகியது. மீதம் இருந்த பயிர்களை விவசாயிகள் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில் தற்பொழுது அந்த மிச்சம் மீதி  சம்பா அறுவடை பணிகள் முடிந்து விட்டது.

சம்பா பயிர்கள்   மேற்கொள்ளப்பட்ட வயல்களில் வைக்கோல் சேகரிக்கும் பணி தற்பொழுது முத்துப்பேட்டை பகுதியில் பரவலாக நடந்து வருகிறது. கடந்தாண்டில் ஒரு ஏக்கர் வைக்கோலின் விலை ரூ ஆயிரம் விற்ற நிலையில் இந்தாண்டு ரூ.3ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் கூட கால்நடைகள் வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் வெளிமாவட்ட வியாபாரிகள் முத்துப்பேட்டை பகுதிகளில் முகாமிட்டு வைக்கோலை மொத்தமாக வாங்கி குவிக்கின்றனர். பின்னர் வைக்கோலை மிஷின் துணையோடு கட்டுகளாக உருட்டி லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். மிஷினில் ஒரு கட்டு உருட்ட ரூ.50 வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 கட்டுகள் வரையிலும் கிடைக்கிறது.

இங்கு சேகரிக்கப்படும் வைக்கோல்கள்  கரூர், சேலம், கோவை  போன்ற வெளிமாவட்டகளுக்கு கொண்டு சென்று இரண்டு மடங்கு லாபம் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் உள்ளூர் வைக்கோலை பேரம் பேசி தேவைக்கு வாங்க வழியின்றி கால்நடை வளர்ப்போர் திணறி வருகின்றனர். தவிடு, புண்ணாக்கு, தீவனம் ஆகியன விலையேறி விட்ட நிலையில் வைக்கோல் விலையும் தற்போது திடீரென பல மடங்கு விலை எகிறியுள்ளதால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வயல்வெளியில் மிச்சம் மீதி கிடக்கும் வைக்கோலும் சமீபத்தில் பெய்த மழையில் நனைந்து அழுகி விட்டன. இதனால் தீவனத்துக்கு வழியில்லாத கால்நடைகள் அடிமாடுகளாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றப்படும் அவலநிலையும் தொடர வாய்ப்புகள் உள்ளது.  
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.