ஆயிஷா படுகொலை... கைது செய்யபட்ட வாசில், ரசிதுன்நிஸா மற்றும் நசீம் தாஜ் வெளியிடும் திடுக் தகவல்கள்.கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முகமது நூருல்லா. இவரது மகள் ஆயிஷா (வயது 10). இவள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 1–ந் தேதி இரவு வீட்டு முன்பு நின்று விளையாடி கொண்டிருந்த சிறுமி ஆயிஷா திடீரென்று மாயமாகி விட்டாள். தனது மகளை முகமது நூருல்லா அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் கடந்த 3–ந் தேதி மாகடி அருகே ஒசஹள்ளி பகுதியில் சாக்கு மூட்டையில் ஆயிஷாவின் உடலை திணித்து மர்மநபர்கள் வீசி இருந்தார்கள். ஆயிஷாவின் கழுத்தை நெரித்து மர்மநபர்கள் கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை வீசியது தெரியவந்தது.

அவளது உடல் அருகே மாந்திரீக பொருட்கள் கிடந்ததால், ஆயிஷா நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், மாணவி ஆயிஷா கொலை வழக்கு தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் நேற்று ராமநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநகர் மாவட்டம் மாகடியில் பள்ளி மாணவி ஆயிஷா கொலை செய்யப்பட்டார். சிறுமி நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்பதால், இதனை ஒரு சவாலாக எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிறுமியை கொலை செய்ததாக முகமது நூருல்லாவின் வீட்டின் அருகே வசிக்கும் முகமது வாசில் (42), பெங்களூரு கோரி பாளையாவை சேர்ந்த ரசிதுன்நிஸா  (38), நசீம் தாஜ்(33) மற்றும் 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முகமது வாசில் முகமது நூருல்லாவுக்கு உறவினர் ஆவார்.

முகமது வாசிலின் சகோதரர் முகமது ரபீக் பக்கவாதத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் குணம் அடைய வேண்டும் என்றால், ஒரு சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும் என்று முகமது வாசிலிடம் நசீம் தாஜ் கூறியுள்ளார். இதனால் நரபலி கொடுக்க சிறுமியை தேடும் பணியில் முகமது வாசில் ஈடுபட்டார். அப்போது கடந்த 1–ந் தேதி தனது வீட்டு முன்பு ஆயிஷா விளையாடுவதை அவர் பார்த்துள்ளார். பின்னர் ஆயிஷாவை தனது செல்போனில் படம் பிடித்து, அதனை நசீம் தாஜிக்கும் முகமது வாசில் அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு, கடந்த 1–ந் தேதி இரவில் ஆயிஷாவை முகமது வாசில், கைதான 17 வயது வாலிபர் சேர்ந்து ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் நள்ளிரவில் ஆயிஷாவின் உடலை ஒசஹள்ளிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமி ஆயிஷாவை நரபலி கொடுத்துள்ளனர். பின்னர், ஆயிஷாவின் உடலை வைத்து மாந்திரீக பொருட்களால் பூஜை செய்தனர். இந்த பூஜையில் கைதான 4 பேரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பூஜை முடிந்ததும் ஆயிஷாவின் உடலை சாக்கு மூட்டைக்குள் திணித்து, அங்கேயே வீசி விட்டு சென்றிருந்தார்கள்.

முன்னதாக ஆயிஷாவை காணவில்லை என்று முகமது நூருல்லா தேடிய போது, அவருடன் சேர்ந்து முகமது வாசிலும் தேடி இருக்கிறார். மேலும் தன் மீது எந்த சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பதற்காக, ஆயிஷா கிடைக்க வேண்டும் என்று, முகமது நூருல்லாவுடன் சேர்ந்து பிரார்த்தனையும்செ ய்திருக்கிறார்.

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் கூறினார். பேட்டியின் போது ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உடன் இருந்தார்.

இந்த நிலையில், ஆயிஷாவை முகமது வாசில் தான் கடத்தி நரபலி கொடுத்தது தெரிந்ததும் நேற்று மதியம், அவர் வீட்டு முன்பு முகமது நூருல்லாவின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவரது வீட்டின் மீது கற்களை வீசினார்கள். வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்தார்கள்.

அத்துடன் சிறுமியை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரி, மாகடி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானமாக பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாகடியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.