எழைகளுக்கு தர்மங்கள் (சதகா) கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்பிறருக்கு பொருளாதார ரீதியாகவும் அல்லது கஷ்டங்களின் போதும் உதவி செய்வதை இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகின்றது. அதிலும், குறிப்பாக ஏழைகளுக்கு அவர்களின் கஷ்டமான நேரங்களில் உதவ வேண்டும்.

இதை ‘சதகா’ (தர்மம் செய்தல்) என்று அழைக்கப்படுகின்றது. சதகாவை ஒரு மனிதன் செய்வதனால், அவனுக்கு அளவுக்கதிகமான நன்மைகள் இவ்வுலகிலும், மறு உலகிலும் கிடைக்கின்றது. என்னென்ன நன்மைகள் கிடைப்பது என்பதைப்பற்றி பார்ப்போம்.

1.சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

2.சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

3.சதகா கியாமத்து நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

4.சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

5.சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதுமாகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

6.சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

7.சதகா செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

8.சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பயப்படச் செய்யாது.

9. சதகா பாவ மன்னிப்பாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

10.சதகா நல்ல முடிவிற்கு சுபச் செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.