கோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி படுகொலை - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது

கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி ஃபாரூக் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் சமீபத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பல்வேறு போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட, திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகியான தோழர் ஃபாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இக்கொலையில் ஈடுபட்ட உண்மையான கொலையாளிகளை காவல்துறை விரைவாக கைது செய்ய வேண்டும். கோவை பகுதியில் இதுபோன்ற கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்
மாநில ஊடகம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி
9884655542
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.