முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வடிகாலில் செப்டிக்டேங் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வடிகாலில் செப்டிடேங் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் கிழக்கு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் சமீபகாலமாக முத்துப்பேட்டை பகுதியில் உள்ள செப்டிடேங் கழிவுகளை வாகனங்களில் சேகரித்து சிலர் நள்ளிரவு நேரங்களில் இங்கு கொண்டுவந்து கொட்டி வருகிறனர்.

அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செப்டிடேங் கழிவுகளையும் இந்த வடிகாலில் கொட்டுவதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசி மிகப்பெரிய சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி அலுவலர்களிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்து கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வர்த்தக கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் கே.வி.கண்ணன், துணை தலைவர்கள் மெட்ரோ மாலிக், நெய்னா முகமது மற்றும் வியாபாரிகள் நேற்று பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்று செயல் அலுவலர் உமாகாந்தனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட செயல்அலுவலர்  உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.