அமெரிக்க ஜனாதிபதியின் வருமான ரகசியங்கள் கசிந்ததுஅமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வருமானம் மற்றும் வரிசெலுத்துகை தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் திரும்பின பெயர் பரிந்துரைக்கப்பட்டநாளிலிருந்தே அவரது வருமானம் மற்றும் வரிசெலுத்துகை தொடர்பான தரவுகள் வெளிவராமல் பாதுகாக்கப்பட்டதோடு, ட்ரம்ப் தனது பெறுமதி 10 பில்லியன் டொலர் என அறிவித்ததை தொடர்ந்து, அதிகளவான அமெரிக்கர்கள் அவரது வரிசெலுத்துகை தொடர்பான தரவுகளை கேட்டும் குறித்த தரவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அந்நாட்டு ஊடகமொன்று, கடந்த 2005 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் நிறுவனம் சார்பாக செலுத்தப்பட்டுள்ள, வரி செலுத்துகை ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இதனால் வெள்ளை மாளிகை தரப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

குறித்த தரவுகளின் படி 2005 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்க பொது வரிசெலுத்துகைக்காக 5.3 மில்லியன் டொலர்களும், மேலதிக மாற்று வரிசெலுத்துகைக்காக 31 மில்லியன் டொலர்களும் செலுத்தியதால் குறித்த வருடத்தில், ட்ரம்பின் வருமானம் சுமார் 150 மில்லியன் டொலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த அவரது வருமானம்சார் தரவுகள் வெளியிடப்பட்டமை சட்டப்படி குற்றமாகுமென வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தகவல் வெளியிடும் உரிமையின் கீழ் தாம் ஆவணங்களை வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுடன் பகிரவும்:

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.