பாபர் மசூதி விவகாரம் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தைரியமில்லாத உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுரைபாபர் மசூதி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்று தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணயின் போது பேசிய அவர், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான பிரச்சனை மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். பாபர் மசூதி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு உதவ உச்சநீதிமன்றமும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 31-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாரா அல்லது இல்லையா என்பது குறித்து தெரிவிக்க தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய விசாரணையின் போது மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறுக்கிட்டு, இந்த விவகாரத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார். ஆனால் உச்சநீதிமன்றமோ, அனைத்து தரப்பும் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றமே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் மேலும் மத்தியஸ்தரையும் தெரிவிக்கும் என கூறியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.