உபி இல் கலவரத்தை தொடங்கியது பாஜக: மூன்று இறைச்சி விற்பனை கூடங்கள் தீ வைத்து எரிப்புஉத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி பொறுப்பை ஏற்ற சில மணி நேரங்களில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரு இறைச்சி கூடங்களுக்கு (கால்நடைகள் வெட்டப்படும் இடம்) அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று அலிகார்க்கில் செயல்பட்டு வந்த இறைச்சி கூடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. பசுமை தீர்பாயம் உத்தரவை மீறி இந்த இறைச்சி கூடங்கள் செயல்பட்டன என்று குற்றம் சாட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. காசியாபாத் போலீஸ் தரப்பில் நகரில் சட்டவிரோதமாக செயல்பட்ட 10 இறைச்சி விற்பனை கூடங்கள் மற்றும் 4 இறைச்சி கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இறைச்சி கூடங்கள் வரிசையாக சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில் ஹத்ராஸின் மான்யாவார் கன்சிராம் காலணியில் மூன்று இறைச்சி  விற்பனை கூடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் ராகேஷ் குப்தா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி அவருடைய குறையை கேட்டறிந்தார்.

பாரதீய ஜனதா உத்தரபிரதேச தேர்தல் அறிக்கையில் இயந்திரமயமாக கால்நடைகள் வெட்டப்படுவதற்கு தடை, சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்னர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரதீய ஜனதா கொடுத்த வாக்குறுதியை கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.