பேராவூரணி அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளைபேராவூரணி அருகே பட்டப்பகலில் அரசு அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள 2-ம் புலிகாடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52), இவர் பட்டுக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி. பேராவூரணியில் விவசாயத்துறை அலுவலராக பணியாற்றுகிறார்.

இவர்கள் தினமும் காலை வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் கணவன்- மனைவி இருவரும் பேராவூரணியில் உள்ள வங்கியில் ரூ. 3 லட்சத்து 84 ஆயிரத்தை எடுத்து வந்து வீட்டின் பீரோவில் வைத்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டனர்.

அவர்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் பணத்தை வைத்துவிட்டு செல்வதை கண்காணித்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைதனர்..

பின்னர் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்ட ரூ. 3 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இந்நிலையில் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் அவரது மனைவி ராணி ஆகியோர் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மோப்பநாய் மூலம் துப்புதுலக்கினர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.