குவைத்தில் இலங்கை பெண் தீ வைத்து கொலை... குற்றத்தை ஒப்புக்கொண்டார் இலங்கை பிரஜை.குவைத் நாட்டில் இலங்கைப் பெண் ஒருவரை இலங்கை இளைஞர் ஒருவர் தீ மூட்டி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைட் சிட்டி நகரின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந்த நாட்டு பொலிஸார் குறித்த இலங்கையரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடும் தீக்காயத்திற்கு உள்ளான இலங்கைப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு பொலிஸார், குறித்த பகுதியில் பணிப்புரிந்த இலங்கை இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் தீ மூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும், அவரை காப்பற்றச் சென்ற தமக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பின்னர் தானே குறித்த பெண்ணுக்கு தீ மூட்டியதாக இளைஞன் வாக்கு மூலம் அளித்துள்ளதாக, த அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் அந்த நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.