முத்துப்பேட்டை அருகே சங்கேந்தியில் புதிதாக வாரச்சந்தை துவக்கம்முத்துப்பேட்டை அருகே எடையூர் சங்கேந்தியில் கிராம மக்கள் வசதிக்காக வாரச்சந்தை துவக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளாக  எடையூர், சங்கேந்தி உள்ளன. இதில் சங்கேந்தி கடைதெருதான் முக்கியமான பகுதியாகும். இதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் தினமும் இங்கு வந்துதான் பொருட்கள் வாங்கி செல்வதும் வெளியூர்களுக்கு செல்ல பஸ் ஏறிச் செல்வதும் வழக்கம். வாரசந்தை செல்லவேண்டும் என்றால் முத்துப்பேட்டை அல்லது திருத்துறைப்பூண்டிக்குத்தான் செல்லவேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

 இந்த நிலையில் இப்பகுதியில் வாரச்சந்தை அமைக்கவேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் சங்கேந்தி கடைத்தெரு அருகே வாரச்சந்தை துவங்கப்பட்டது. இதனால்  சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து காய்கறி உள்ளிட்ட தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.