குடும்ப அட்டைதாரர்களுக்கு ( ரேஷன் கார்டு ) முக்கிய அறிவிப்பு !தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்னனு குடும்ப அட்டைகள் (Smart Family Card) 01-04-2017 முதல், குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்றுவரும் நியாயவிலை அங்காடிக்கு வெகு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் வழங்கப்படவுள்ளன. முழுமையாக மற்றும் பகுதியாக ஆதார் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் குடும்ப அட்டையில், ஆதார் பதிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே அச்சுப்பதிவு செய்திட கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, ஸ்மார்ட் குடும்ப அட்டையில், முன்னுரிமை பெற்ற குடும்பங்களை (PHH) - பொருத்தமட்டில், அந்த குடும்பத்தின் மு்த்த பெண் உறுப்பினர். குடும்பத்தின் தலைவராக இருப்பார். தற்போது குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர், நடைமுறையிலுள்ள குடும்ப அட்டையுடன் முகவரிக்கான ஆதாரம் அல்லது அடையாள ஆவணத்தினை கொண்டு சென்று சிறப்பு முகாமில் காண்பித்து, ஒப்புதல் பட்டியலில் கையொப்பம் செய்து புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு அச்சுக்கட்டணம் ஏதும் செலுத்திட வேண்டியதில்லை, ஸ்மார்ட் குடும்ப அட்டையினை பெற்றவுடன் நியாய விலை அங்காடி விற்பனையாளரின் மு்லம் உடனடியாக விற்பனை முனையக் கருவியில் (POS) ஸ்மார்ட் குடும்ப அட்டையினை ஸ்கேன் செய்திட வேண்டும், இதன்மு்லம் குடும்ப அட்டைதாரர் அவரது கைபேசியில் குறுஞ்செய்தியைப் பெறுவார்.

குடும்ப உறுப்பினர்களில் இதுவரை ஆதார் இணைக்கப்படாத விடுப்பட்டுள்ள உறுப்பினர்களின் ஆதார் பதிவு செய்திட ஏதுவாக ஜுன் - 2017 மாதம் 17ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலரின் ஆதார் பதிவு செய்யாமல் உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கு  ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதத்திற்கு மட்டும். விற்பனை முனையக் கருவியில் (POS) பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் குடும்ப அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்யப்பட வேண்டுமானால், பொதுசேவை மையத்தின் மு்லம் (CSC) உரிய கட்டணம் செலுத்தி திருந்திய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம்.   பிளாஸ்டிக்காலான ஸ்மார்ட் குடும்ப அட்டையினை ஒவ்வொரு முறையும். நியாயவிலை அங்காடிக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை. அதன் பின்பக்கம் உள்ள QR Code ஐ  தெளிவாக ஜெராக்ஸ் எடுத்துச் சென்றாலே போதுமானதாகும்,  குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினர்களின் விவரங்களுடன் இதுவரை ஆதார் மற்றும் கைபேசி எண் விவரங்களை இணைக்காதவர்கள். உடனடியாக. நியாயவிலை அங்காடியிலுள்ள விற்பனை முனையக்கருவியில் (POS) அவற்றை விரைவில் இணைத்து. ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப்பெற்று. அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழான பலன்களைப்பெற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.