தொடரும் காஷ்மீர் போராட்டம் . இந்திய அரசின் அநீதி காஷ்மீர் நாள் 236

1990 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி காஷ்மீரிகள் தங்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தனர்,
அப்படி தான் அன்றைய தினமும் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள Zakoora மற்றும் Tengpora பகிதிகளிலும் போராட்டம் நடத்தினர்..

Zakoora பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையோடு United Nations Military Observers Group on India and Pakistan (UNMOGIP) அலுவலகத்தை நோக்கி அமைதியான பேரணியை நடத்தினர்.

இந்த அமைதியான பேரணியை தடுத்து நிறுத்த இந்திய அகிம்சை தேசத்தின் இராணுவம் கையில் எடுத்தது துப்பாக்கியை தான்.
கிட்டத்தட்ட 26 அப்பாவி பொது மக்களை கொடூரமாக சுட்டு கொன்றது இந்திய இராணுவம்.

இதே நாளில் இதே போன்று அன்று மாலையே,
பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்தியத்தின் இந்த இனப்படுகொலையை கண்டித்தும், காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்,
இந்திய ஜனநாயக தேசத்தில் தங்களது உரிமையும் உயிரும் பறிக்கப்படுகிறது என்று வாய் திறந்து முழக்கம் போட்டதற்காக கிட்டத்தட்ட 21 அப்பாவி பொது மக்களை சுட்டு கொன்றது இந்திய இராணுவம்.

ஒரே நாளில் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதியாக போராடிய 47 அப்பாவி பொது மக்கள் இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்,
கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய இராணுவ துப்பாக்கியின் குண்டு பட்டு காயம் ஏற்பட்டது.

Amnesty முதற்கொண்டு இந்த தேசத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் நீதி கேட்டு பல்வேறு வழக்குகளையும், போராட்டங்களையும் நடத்திவிட்டனர்.

ஆனால் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு இன்று தான் காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்திய இராணுவத்தின் பெல்லட்ஸ் பயங்கரவாத தாக்குதலில் கண் பார்வை பறிக்கப்பட்ட மாணவர்கள் எப்படி தங்களது படிப்பை தொடர முடியும்?
காஷ்மீரின் அடுத்த தலைமுறையை திட்டமிடு அழித்து கொண்டிருக்கிறது இந்திய தேசம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.