அதிரையில் சிக்கிய குழந்தை கடத்தல்காரன்! பெற்றோர்களே எச்சரிக்கை!அதிரையில் நேற்று முந்தினம் இமாம் ஷாபி பள்ளி அருகில், சந்தேகத்துக்குறிய மர்ம நபர் ஒருவர் உலாவிக்கொண்டு இருந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த அதிரையை சேர்ந்த ஒரு நபர் மர்ம நபரை உற்று நோக்கிய போது, அவர் பள்ளியிலிருந்து வரும் குழந்தையை கடத்த முயன்றுள்ளார். இதையடுத்து அதனை தடுத்து அந்த மர்ம நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றும் இதே நபர் மீண்டும் பள்ளிக்கு அருகே நடமாடிக்கொண்டிருந்தார். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை மிரட்டி அனுப்பி வைத்ததுடன் அவரது நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகின்றனர்.

 இதே போன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அதிரை ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளிக்கு அருகே இதே நபர் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

பெற்றோர்கள் எச்சரிக்கை:

தற்போது தமிழகம் முழுவதும் குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. கொத்தடிமையாக்குவது முதல், உறுப்பு திருடுவது முதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு முதல், மருத்துவ சோதனைகள் முதல், நரபலி கொடுப்பது வரை பல காரணங்களுக்காக நாள் தோறும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. தற்போது இது போன்ற விசயம் அதிரையில் புதிதானாலும், பட்டுகோட்டை, முத்துப்பேட்டை போன்ற பக்கத்து ஊர்களில் குழந்தைகள் கடத்தல் இதற்கு முன்னதாக நடந்துள்ளது.

கோடை விடுமுறை விடப்பட உள்ள இந்த சூழலில், பல குழந்தைகள் வீடுகளில் இல்லாமல் உறவினர் வீடுகளிலும், வெளியூர்களில் இருந்து வந்த உறவினர்களின் குழந்தைகளுடன் வீதிகளில் விளையாடுவதை நாம் பெருவாரியாக காண முடியும். எனவே நமது குழந்தைகளை கண்காணிப்பு வட்டத்திற்க்குள் வைத்திருப்பதுடன், அவர்களிடம் விலை குறைவான சிறிய செல்போனையும் பேலன்ஸுடன் கொடுத்தால் இக்கட்டான நிலைகளில் தொடர்புகொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளிடம் நேரடியாக சொல்லி அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல் இது போன்று நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளையாட்டாக விளக்க வேண்டும். தெரியாத யார் அழைத்தாலும் செல்லக்கூடாது, எதை கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது என்பதையும் அவர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டு இருத்தல் அவசியம்…

-நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.