மரணப்படுக்கையில் திணறும் முஸ்லிம் காங்கிரஸ்ஆன்­மி­கத்தின் மரத்­தடி நிழலில் அர­சி­யலைப் பார்க்­கா­த­வர்கள் அதே அர­சி­யலால் ஏமாற்­றப்­ப­டு­வார்கள். சட­வாதம் என்­பது மேற்­கு­லகால் மாத்­திரம் திணிக்­கப்­ப­டு­வ­தல்ல, அது ஒவ்­வொரு மனி­த­னுக்­குள்ளும் இருக்­கி­றது. சட­வாதம் அர­சி­யல்­வா­தி­களின் ஆன்­மாவை முற்­றாக ஆக்­கி­ர­மித்து விட்டால் அதி­லி­ருந்து அவர்கள் ஈடேற்றம் காண முடி­யாது, சமு­தா­யமும் வெற்றிபெற முடி­யாது.

பிழை­யான ஒரு தலை­மையைத் தொடர்ந்தும் நாம் சரி­காணப் பழ­கி­விட்டால் நாம­னை­வரும் சட­வா­தத்தின் அடி­மை­கள்தான்.

முஸ்லிம் காங்­கிரஸ் அதன் மரணப் படுக்­கையில் மூச்­சுத்­தி­ணறும் இன்­றைய நாட்­களில் ஒட்­சிசன் வழங்கப் பலர் களம் காண்­கி­றார்கள். தலை­மையைத் திருத்த முனை­வதா தலை­வரை மாற்றத் துடிப்­பதா என்­பதைத் தெட்டத் தெளி­வாகக் கூற முடி­யாத மர்மப் புள்­ளியில் முஸ்லிம் அர­சியல் பய­ணிக்­கி­றது. முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்லிம் இனத்­திற்­கான கட்­சியா அல்­லது இஸ்­லா­மிய விழு­மி­யங்­களைப் பேணும் கட்­சியா என்ற ஒரு முக்­கி­ய­மான கேள்­வியைத் தொடுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. குர்ஆன், ஹதீஸ் அடிப்­ப­டையில் அதன் கட்சி யாப்பு வரை­யப்­பட்­டி­ருப்­ப­தாகச் சொல்­கி­றார்கள். இதனை எப்­படி நம்­பு­வது, அது ஈமா­னுக்குப் பங்கம் விளை­விக்­காதா?

கட்சி என்­பது கண்­ணுக்குத் தெரி­யாத சடப்­பொ­ருளால் வடிவம் பெறாத ஒரு கட்­ட­மைப்பு. தலைமை என்­பதும் கட்சி ஆத­ர­வா­ளர்கள் என்­பதும் கண்­ணுக்குத் தெரி­கின்ற உயிரும் உடலும் கொண்ட சிருஷ்­டி­கள்தான். கட்சி சரி­யாகப் பயணிக்­கி­றது என்றால் தலை­மையும் தொண்­டர்­களும் கட்­சியின் இலக்கு நோக்கிச் சரி­யாகப் பய­ணிக்­கி­றார்கள் என்று அர்த்தம். கட்சி பிழை­யான வழியில் செல்­கி­றது என்றால் தலைவர் பிழை­யான திசையில் வழி நடத்­து­கிறார் என்று ஓர் அர்த்தம். தொண்­டர்கள் அதை சரி­காண்­பது பிழை­யா­னது என்­பது மற்­றுமோர் அர்த்தம்.

கட்சி குர்ஆன், ஹதீஸ் அடிப்­ப­டையில் இயங்­கு­வதை அவ­தா­னிப்­பது மார்க்க அறிஞர் குழுவா, இல்லை தொண்டர் கூட்­டமா? கட்சி குர்ஆன், ஹதீஸ் அடிப்­ப­டையில் இயங்­க­வில்லை என்றால் முஸ்லிம் காங்­கி­ரஸை ஆத­ரிக்கும் ஒரு முஸ்லிம் வாக்­காளன் நீதி­மன்றம் செல்­ல­லாமா?

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டமும் முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்சி யாப்பும் எந்தப் புள்­ளியில் அத்­த­கைய வாக்­கா­ள­னுக்குப் பதில் சொல்லப் போகி­றது? சட்­டத்­த­ர­ணி­களால் வழி­ந­டத்­தப்­படும் முஸ்லிம் காங்­கிரஸ் இவற்­றுக்குக் கூறப்­போகும் பதில் என்ன? பேராளர் மாநா­டு­களில் எடுக்­கப்­படும் தீர்­மானம் குர்ஆன், ஹதீஸ் அடிப்­ப­டையில் எடுக்­கப்­ப­டு­கி­றது என்று ஹலால் சான்­றிதழ் வழங்கும் கடமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கு இல்­லையா? அதனைக் கோரி நிற்கும் உரிமை முஸ்லிம் காங்­கி­ரஸின் போரா­ளி­க­ளுக்கு உண்டா? சர்­வ­சா­தா­ரண விட­யங்­களில் ஷரீ­ஆவை அலசும் அறி­வு­ஜீ­விகள் தங்­களை ஆளும் பிர­தி­நி­தி­களை ஆளும் ஷரீஆ தொடர்­பாக ஏன் அல­சு­வ­தில்லை?

முஸ்லிம் காங்­கி­ரஸின் இன்­றைய பிரச்­சி­னைதான் என்ன? தலைமை மாற வேண்­டுமா? கொள்­கைகள் பிழை­யா­ன­வையா? இலக்கு பற்­றிய தெளி­வில்­லையா? தொண்­டர்கள் மந்­தை­களா? பொய் வாக்­கு­று­திகள் ஏமாற்றம் தரு­கின்­ற­னவா? தேசியப் பட்­டியல் பங்­கீ­டு­களா? அமைச்சுப் பத­வி­களா? நாரே தக்பீர் முழக்­கத்தில் தர்­மத்தின் குரல்­வளை நசுக்­கப்­ப­டு­கி­றதா? அல்­லாஹு அக்பர் கோஷத்தில் அதர்மம் முடி சூட்­டு­கி­றதா? உச்­ச­பீடம் இந்த நாட்டின் அதி­சி­றந்த முஸ்­லிம்­களைத் தேர்ந்­தெ­டுத்து ஸம் ஸம் நீரால் குளிப்­பாட்டி எடுத்த முத்­தான முஃமீன்­களின் உயர் சபையா? அதி­லி­ருக்கும் உல­மாக்கள் ஆன்­மிக அர­சியல் தொடர்­பாக இறுதி பத்­வாவை வழங்­க­வல்ல புனி­தர்­களா?

எந்தக் கேள்­விக்கும் நேர­டி­யாகப் பதி­ல­ளிக்க முடி­யா­த­வர்கள் தலை­வர்­க­ளாக முடி­யாது பித்­த­லாட்டம் செய்து கோட்டை கட்ட முடி­யாது. தேசியப் பட்­டியல் என்­பது நேரடி அர­ச­ியலில் ஈடு­ப­டாத புத்­தி­ஜீ­வி­களைப் பாரா­ளு­மன்­றத்­திற்குள் உள்­வாங்கி, அவர்­க­ளது புல­மையை நாட்டின் சட்­ட­வாக்­கத்­திற்கு முறை­யாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு விசேட சலுகை. ஆனால், முஸ்லிம் காங்­கிரஸ் அதனை பெரும்­பான்மைக் கட்­சி­க­ளிடம் பேரம்­பேசி தேர்தல் கால இல­வச இணைப்­பாகப் பெற்றுக் கொண்டு அனுப்­பிய புத்­தி­ஜீ­விகள் யார்? வாக்குச் சேக­ரிப்­பின்­போது ஒவ்­வொரு தொகுதி வாக்­கா­ளர்­க­ளையும் கவர்ந்து முஸ்லிம் வாக்­கு­களை ஏமாற்றிப் பெறு­வ­தற்­காக தலைமை, தேசியப் பட்­டி­யலில் உங்கள் தொகு­திக்கு ஒன்று தருவோம் என்று உரத்த குரலில் முழங்கும் நாரே தக்பீர் கோஷத்­திலும் பட்­டா­சு­களின் வெற்றுச் சத்­தங்­க­ளிலும் முட்­டாள்த்­த­ன­மான கர­கோ­ஷத்­திலும் தலைமை மகிழ்ந்து மினுங்கும். அந்த ஒளியின் பிர­கா­சத்தில் வாக்­காள விட்­டில்கள் வலிந்து விழுந்து தேர்­தலின் பின்னர் கருகிச் சிதறும்.

மதுக் கிண்­ணங்­களை விட போதை தர­வல்­லவை தேசியப் பட்­டி­ய­லுக்­கான வாக்­கு­று­திகள். இலங்கை முஸ்லிம் அர­ச­ியல்­வா­தி­களின் பேரா­சையின் ஓர் உச்­ச­மான குறி­யீ­டுதான் தேசியப் பட்­டியல் எனும் மதுக்­கு­வளை. தலைமை அதனைத் தெளி­வாகப் புரிந்து வைத்­தி­ருக்­கி­றது. இரண்டே இரண்டு தேசியப் பட்­டி­யலை சுழற்சி முறையில் பகி­ரலாம் என்று தர்க்க முர­ணாகத் தலைமை பிர­க­டனம் செய்­தாலும் அந்த மகு­டிக்கு மயங்கும் பாம்­பாக அனு­பவம் வாய்ந்த சிரேஷ்ட பிர­ஜை­களும் ஆடித் தொலைப்­பது சமூ­கத்தின் சாபக்­கே­டாகி விட்­டது.
ஈற்­றிலே, மரம் அதன் வேர்­களை வெட்டத் தொடங்­கி­யது. இலைகள் சல­ச­லத்­தன. கிளைகள் கிலு­கி­லுத்­தன. பூக்கள் புள­காங்­கிதம் அடைந்­தன. ஆனால், மரம் தான் வேர்­கொண்ட நிலத்தை மறந்து விட்­டது. ஆம் மக்­களை மறந்த அரசியலின் குறி­யீ­டாக மரம் மாறி விட்­டது.

தலை­வர்­க­ளுக்­கி­டையே நிகழும் தனிப்­பட்ட பிரச்­சினை முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளாக எண்­பிக்­கப்­பட முடி­யாது. யார், எதை, எப்­படி நியா­யப்­ப­டுத்­தி­னாலும் முஸ்லிம் காங்­கிரஸ் இன்று திசை மாறிப் பய­ணிக்­கி­றது எனும் யதார்த்தம் அனை­வ­ராலும் உண­ரப்­ப­டு­கி­றது.

தலைவர் தனது இருப்பை முட்­கி­ரீடம் என்று பேராளர் மாநாட்டில் வர்­ணிக்­கிறார். செய­லாளர் ஹஸன் அலியின் அதி­காரம் பொருந்­திய செய­லாளர் நாயகம் எனும் பத­வியின் அதி­காரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தலைவர் நிபந்­தனை விதிக்­கிறார். முட்­கி­ரீடம் என்று கண்டால் அதி­கா­ரமும் பொறுப்பும் உள­வி­ய­லி­ன­டிப்­ப­டையில் இயற்­கை­யா­கவே பகி­ரப்­ப­டு­வ­துதான் யதார்த்தம். ஆனால், ஹஸன் அலியை முற்­றா­கவே ஓரங்­கட்­டி­விட்டு அதி­கா­ர­மற்ற செய­லா­ள­ராக இன்­னொ­ரு­வரை நிய­மித்­தி­ருக்­கி­றது. தலை­மையும் உச்­ச­பீ­டமும். தர்க்­க­வி­ய­லுக்கு அப்­பாற்­பட்ட அர­சி­ய­லாகத் தடு­மா­று­கி­றது முஸ்லிம் காங்­கிரஸ்.

ஹஸன் அலியின் வேத­னையை தலைமை ஆமோ­திக்­கி­றதாம். தனி நபர்­க­ளு­டைய வேத­னை­களை மையப்­ப­டுத்­து­வது கட்­சியின் தலை­மையின் கட­மை­யல்ல. தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தியை மையப்­ப­டுத்தி, அனு­தாப அலை­யினை உரு­வாக்கி இழந்த அதி­கா­ரத்தைப் பெறு­வது என்­பது பத­வி­யி­றக்­கப்­பட்ட செய­லா­ளரின் போராட்­ட­மாகக் கரு­தப்­ப­டவும் முடி­யாது.

இதைக் கொண்டு வேறு நபர்கள் அர­சியல் செய்­வ­தற்கு தான் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று தலைவர் அறி­விக்­கிறார். உங்­க­ளு­டைய தவ­று­களை தட்டிக் கேட்கக் கூடாது என்று எங்கள் மீது அதி­கார தோர­ணையில் குர­லு­யர்த்த உங்­க­ளுக்கு அதி­காரம் வழங்­கி­யது யார்? இலங்­கையின் எந்த மாகா­ணத்­திலும் உள்ள எந்­த­வொரு முஸ்­லிமும் தனது சமூகம் சார்ந்த அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தற்கு உரிமை இருக்­கி­றது, கட்சி சமூ­கத்­திற்­கு­ரி­யது. சமூகம் கட்­சியின் கொத்­த­டி­மை­யல்ல.

தலைமை தடு­மா­று­கி­றது, உச்ச பீடம் செய்­வ­த­றி­யாமல் திண­று­கி­றது. தலைவர் திருந்த வேண்டும் என்று மாற்று அணி கூட்டம் போடு­கி­றது. முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்ற தேசிய காங்­கி­ரஸும் மக்கள் காங்­கி­ரஸும் இந்த சூழலைப் பயன்­ப­டுத்தி விடக் கூடும் எனும் அச்­சம்தான் தலை­வரின் தொனியில் தெரி­கி­றது. தான் மட்டும் யானை­யாக காட்சி தர வேண்டும் என்­பதில் குறி­யாக இருக்­கி­றது. ஆனால், கட்சி சமூ­கத்­திற்­கா­னது என்று அதே தலைமை பறை­சாற்­று­கி­றது. இதற்கு விடை காண்­பது போரா­ளி­களின் கடமை இல்­லையா?

முஸ்லிம் காங்­கிரஸ் மக்­களின் இயக்கம் என்றால் அதற்­கான பண்­பு­களை, அள­வு­கோல்­களை முதலில் போரா­ளிகள் புரிந்து கொள்ள வேண்டும். புத்­தி­ஜீ­விகள் தெளி­வாக அதன் தர்க்­க­வி­யலை நிர்­ண­யிக்க வேண்டும். மூன்று முஸ்லிம் கட்­சி­களும் முட்­டி­மோதிக் கொண்டால் ஒரு கட்­சியின் அபி­வி­ருத்­தியை இன்­னு­மொரு கட்சி பகிஷ்­க­ரித்து மக்­களை பயன் பெற விடாமல் தடுத்தால் சிவில் சமூக தலை­மைகள் இதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். கட்சி வணிகமா, கட்சி அரசியலா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

நாடு தழுவிய போராளிகளின் குமுறல்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், கழுத்தறுப்புகள் அனைத்தும் பிசாசுகளாக மாறி முஸ்லிம் காங்கிரஸ் எனும் பாழடைந்த கோட்டையின் மதில்களை முற்றுகையிட்டு சமூகத்தின் நிம்மதியைத் தொலைத்து விட்டன. 16 ஆண்டுகள் இந்த சமூகத்தின் வாக்குறுதிகளை வார்த்தை ஜாலங்களால் கவர்ந்து தக்பீர் முழக்கங்களால் அதன் உணர்வலைகளை வஞ்சித்து கறைபடிந்த வரலாற்றுப் பக்கங்களை உருவாக்கி விட்டது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் அதற்கு ஒத்தூதிய உச்சபீடமும்.

பிழையான ஒரு தலைமையைத் தொடர்ந்தும் நாம் சரிகாணப் பழகிவிட்டால் நாமனைவரும் சடவாதத்தின் அடிமைகள்தான்.
சர்வசாதாரண விடயங்களில் ஷரீஆவை அலசும் அறிவுஜீவிகள் தங்களை ஆளும் பிரதிநிதிகளை ஆளும் ஷரீஆ தொடர்பாக ஏன் அலசுவதில்லை?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.