இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடி வந்த சையது சகாபுதீன் மறைவு சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்புஇந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடி வந்த
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சையது சகாபுதீன் மறைவு சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்பு

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல்

பாராளுமன்ற உறுப்பின ராக மூன்று முறை பதவி வகித்தவரும், முன்னாள் அயல்நாட்டு தூதருமான சையது சகாபுதீன், உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நுரையீ ரல் தொற்றுக்கு சிகிச்சை பெற சஹாபுதீன் அனுமதிக் கப்பட்டார்.
இந் நிலையில் சனிக்கிழமை காலை 5. 20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது ஜனாஸா டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
அவரது மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப் பதாவது:-

இந்திய முஸ்லிம்களின் நலத்திற்காகவும், உரிமை களுக்காகவும் காலமெல்லாம் போராடி வந்த சையது சகாபுதீன் அவர்களின் மறைவு இந்திய சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும்.
இந்திய வெளி விவகாரத் துறை அதிகாரியாகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப் பினராகவும் பணியாற்றிய சகாபுதீன் அவர்கள் இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

1964-ல் காயிதே மில்லத் அவர்களின் ஒத்துழை ப்போடு உருவாக்கப்பட்ட மஜ்லிசே முஷாவரத் என்னும் இந்திய முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புக்கு நீண்ட நாட்களாக தலைவர் பதவி வகித்தார்.

அவரின் ‘முஸ்லிம் இந்தியா’ ஆங்கில மாத இதழ் இந்திய முஸ்லிம்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்தது.
அரசியலில் ஒரு புதிய முயற்சியாக இன்ஷாஃப் பார்ட்டி என்னும் அமைப்பையும் தோற்றுவிற்று சிறிது காலம் நடத்தி வந்தார்.
பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும், ஷரீஅத் சட்ட பாதுகாப்பு போ ராட்டத்திலும் முன்னணியில் நின்று போராட்ட வீரராக பணியாற்றினார்.
எனக்கு மிகவும் நெருக்கமானவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இந்திய முஸ்லிம்கள் பிரச்சினை குறித்து பலமுறை அவருடன் கலந்தாலோசித்த காலங்கள் என்றும் நினைவில் இருப்பவை.
இந்திய அரசியல் களத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வட மாநிலங்களில் வேரூன்றி வளர்வதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளன்போடு பலமுறை வலியுறுத்தி வந்தார்.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு கிடைத்த தலைசிறந்த தலைவர் அவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித் துக் கொள்கிறோம்.

அன்னாரின் மஃபிரத் திற்கு அனைவரும் துஆ செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்க்கைக்குறிப்பு

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கடந்த 1935-ஆம் ஆண்டு சஹாபுதீன் பிறந்தார்.

1958-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

1959-ஆம் ஆண்டு முதல் 1961-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியத் தூதராகவும், துணைத் தூதராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார்
.
கடந்த 1979-ஆம் ஆண்டு பிகாரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக சஹாபுதீன் தேர்வு செய்யப்பட்டு,
1984-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை அவர் வகித்தார். அதேபோல், கிஷண்கஞ்ச் தொகுதியிலிருந்து 1985-ஆம் ஆண்டு ஒரு முறையும், 1991-ஆம் ஆண்டு மற்றொரு முறையும் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இரங்கல் தெரிவித்தார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.