ஐந்து விஷயங்களை செய்யாமல் உறங்க வேண்டாம் - முஹம்மது நபி (ஸல்)முஸ்லிம்களின் இறைத்தூதராகவும், இறுதி நபியாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தங்களுடைய உயிருக்கும் மேலாகவும் மதிக்கின்றனர். அவர் வாழ்க்கையில் செயல்படுத்திக்காட்டியதை, ஹதீஸ் என்று கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் முஸ்லிம்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும்.

எல்லா விஷயத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி தந்துள்ளார்கள். அதேப்போன்று, ஒருவர் தூங்குவதற்கு முன்பு சில விஷயங்களை செய்துவிட்டு தூங்கினால் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். அலியே! ஐந்து விஷயத்தை தினமும் செய்யாமல் உறங்க வேண்டாம்.

1.முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.

2.தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்காதே.

3.கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

4.சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல் உறங்காதே.

5.உனது எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்காதே.

அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு, நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம் என கேட்க, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

1.குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.

2.சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.

3.நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை தவாபு செய்த நன்மை பெறுவீர்.

4.லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை பெறுவீர்.

5.அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி என 10 முறை ஓதினால் உமது எதிரியை கொன்றதற்கு சமம் என கூறினார்கள். இந்த விஷயங்கள் அனைத்துயுமே இரவு உறங்குவதற்கு முன்பு செய்யும் பொழுது, அது இம்மையிலும் மறுமையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே கூறியுள்ளார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.