செந்தலைப்பட்டினத்தில் சாலை விபத்து மாணவர் ஜம்மூன் அலி பலி !தஞ்சாவூர் மாவட்டம் அதிரையை அடுத்த செந்தலைப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் நாகூர்பிச்சை. இவரது மகன் ஜம்மூன் அலி ( வயது 16) 10 வது படித்து விட்டு, மேல்படிப்பு செல்லும் ஏற்பாட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு செந்தலைப்பட்டினம் கடைவீதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்பொழுது  கிழக்கு கடற்கரை சாலையில், வேளாங்கன்னியிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த மாணவர் ஜம்மூன் அலி மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாணவர் ஜம்மூன் அலியை செந்தலைப்பட்டினம் பொதுநலச் சங்கத்தினர் தங்களது ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் மாணவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

பின்னர் மாணவரது உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் சுதன் என்பவரை பிடித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.