ஷப்னா "சொல்லியதெல்லாம்" உண்மையா? நடந்தது என்ன விசாரணையின் தகவல்கள் !!!ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் நின்று நிலவட்டுமாக.....
கடந்த 20-02-17 அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் இஸ்லாமிய பெண் ஒருவர் இஸ்லாமிய மக்கள் உயிரிலும் மேலாக மதிக்க கூடிய ஷரீஅத் சட்டத்தை நீக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

இஸ்லாமியர்களின் இந்த சட்டத்தை நீக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் சூழலில் இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இப்படி இருக்கும் போது ஒரு இஸ்லாமிய பெண் ஷரீஅத்தை தடை செய்ய வேண்டும் என்று கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் பேசியது இஸ்லாமிய சமூக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் தமுமுக,மமக மாநில தலைமையின் அறிவுறுத்தல் படி கோவை மாவட்ட நிர்வாகம் இதை விசாரணை செய்து பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க களமிறங்கிது.விசாரித்ததில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கோவையில் உள்ள ஷப்னா என்பது தெரியவந்தது.உடனடியாக மாவட்ட நிர்வாகம் அவரது இல்லத்தில் வைத்து விசாரணை நடத்தியது.
கோவை மாவட்டம் N.H ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷப்னா.காதல் திருமணம் செய்து கொண்டவர்.இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவரது கணவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருகிறார் .இவர் செல்போன் கடை வைத்து உள்ளார்.

ஷப்னாவின் பெற்றோர் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.இவரது தந்தை இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்.தாய் வேறொரு மதத்தை சார்ந்தவர்.
எனவே அடிப்படையில் இருந்து இஸ்லாமிய சிந்தனைகளோ அல்லது கோட்பாடுகளோ பெரிய அளவில் பின்பற்றியதாக தெரியவில்லை
(அல்லாஹ் அறிவான் )

இப்படி பட்ட சூழலில்தான் ஷப்னாவிற்கு திருமணம் முடிக்க மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடைப்பெற்றுள்ளது.இதை கேட்ட அவரது பாட்டி நம் குடும்பத்திலேயே ஒரு பெண் இருக்கிறது என்று சொல்லி இந்த சகோதரனின் குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறார்.
நாளடைவில் ஷப்னாவிற்கும்,அந்த சகோதரனுக்கும் காதல் மலர்கிறது.சிறிது காலம் காதலுக்கு பிறகு குடும்பத்தார் இருவருக்கும் திருமணம் முடித்து வைக்கின்றனர்.

ஷப்னாவின் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம்.4 பவுன் நகையும்,சிறிது பொருளாதாரமும் பெண் வீட்டார் மாப்பிள்ளை குடும்பத்தார்க்கு அளித்துள்ளனர்.திருமணமான சில மாதத்திலேயே பிரச்சினைகள் கணவன்,மனைவிக்குள் பிரச்சினை நடைபெறுகிறது.

உடனே திருமணம் நடத்தி வைத்த N.H.ரோடு நாகா மொஹல்லா ஜமாத் நிர்வாகத்திடம் ஷப்னா முறையிடுகிறார்.அப்போதைய ஜமாத் பொறுப்பாளரும்,தமுமுக முன்னாள் மாவட்ட பொருலாளர் அக்பர் பாய் விசாரணை செய்து அவரது கணவரை கடுமையான முறையில் எச்சரித்து ஒழுங்காக வாழ அறிவுரை கூறி அனுப்பி உள்ளார்.
அதன் பிறகு அக்பர் பாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விடுகிறார்.மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.அதை தொடர்ந்து ஜமாத்தில் புகார் அளித்தும் சரியான முறையில் அணுகுமுறையில்லை.அவர்கள் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஒரு வருட காலம் அங்கு அலைந்த பிறகு அவர்கள் நீதிமன்றம் செல்லுமாறு ஆலோசனை கூறி உள்ளனர்.இதனால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.மூன்று ஆண்டுகள் நீதிமன்ற வாசலில் அலைந்துள்ளார்.இறுதி கட்டத்தில் நீதிபதி தனிப்பட்ட முறையில் அந்த சகோதரனிடம் ஒழுங்காக வாழ்க்கை நடத்தும் படியும் இல்லாவிட்டால் வேறு வழக்கு போடுவோம் என்று கூறி எச்சரித்துள்ளார்.

இதனால் பயத்தில் ஓழுங்காக வாழ்வதாக கூறி ஷப்னாவோடு சென்றுள்ளார்.மூன்று மாதத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்ப்பட்டு ஜமாத்தை தொடர்பு கொள்ளும் பொழுது எந்த பதிலும் இல்லாததால் கணவர் தரப்பில் சேலம் ஷரிஅத் நீதிமன்றம் சென்று புகார் அளித்துள்ளனர்.

அங்கும் சரியான முறையில் விசாரிக்க படாமல் மிரட்டியதாக ஷப்னா குறிப்பிடுகிறார்.

நீதிமன்றம் நாடியும் தீர்வு கிடைக்க படவில்லை.ஜமாத்தும் பயனில்லை.வேறு யாரும் தெரியாததால் கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கிறார்.
ஆனால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் உங்கள் ஜமாத்களை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.பலமுறை இவர்களை புறக்கணித்ததாக தெரிவிக்கிறார்.உடனே இவர் தன் தாயோடு சென்னையில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார்.மேலும் அவரது கணவரும்,மாமனாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.இதனால் அவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க்க சரி என்று அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தான் கடந்த 20-2-17 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.அதில் கணவர் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளார்,பாலில் ரீதியாக கொடுமை படுத்த பட்டதாக தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி நாராயணன் இந்த சகோதரியின் நிலையை கேட்டு ஒரு வழக்கறிஞருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.அவர் இவரது கணவரிடம் ஜீவனாம்சம் வேண்டுமென்றால் பெற்று தரலாம்.ஆனால் அவரது கணவர் திருமணம் செய்வதை தடுக்க முடியாது என்று
கூறியுள்ளார்.

இஸ்லாமிய சட்ட படி அவர்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.அதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.அந்த வழக்கறிஞர் பேசும்போதே இஸ்லாமிய விரோத கொள்கையை பரப்புவதை போல்தான் பேசியுள்ளார்.ஏனென்றால் அவர் பேசும்போது இஸ்லாமிய சட்டம் கூறுவது என்ன என்பதை எடுத்து கூறாமல் பொத்தாம் பொதுவாக நான்கு திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

உடனே இதை கேட்டு கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் கொந்தளித்து,தலாக் என்று ஒரு வார்த்தை கூறிவிட்டால் எங்கள் வாழ்க்கையே முடிந்து விடுமா என்று இஸ்லாமிய சட்டத்தை அறியாமலும்,ஷரீஅத் என்றால் என்னவென்று தெரியாமல் பேசியதாக தெரிவித்தார்.

அந்த சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு கொடுத்த சுதந்திரம் குறித்தும்,தலாக் என்றால் என்ன என்பது குறித்து தர்பியத் கொடுத்து உங்கள் கணவர் கொடுத்த தலாக் செல்லாது என்றும் நாங்கள் விசாரித்து உங்களுக்கு நீதியை பெற்று தருகிறோம் என்று தமுமுக மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

இந்த பெண் பேசியதற்கு அடிப்படை என்ன என்று ஆராய்ந்தால் அவரது பெற்றோர் கலப்பு திருமணம் செய்தவர்கள் என்பதால் குர்ஆன் ஹதீஸ் முறையாக சொல்லி தரவும்,இஸ்லாமிய மார்க்க கொள்கைகளை கூறவும் யாரும் இல்லை.

அதே போல சகோதரி ஷப்னா எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.அதற்கும் மாவட்ட நிர்வாகம் உதவுவதாக கூறியுள்ளனர்.

இவரது தரப்பு நியாயத்தை விசாரித்த மாவட்ட நிர்வாகிகள் ஒரு தரப்பின் வாதத்தை வைத்து பேச முடியாது என்பதால் கணவர் தரப்பை விசாரணை செய்ய நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் விரைந்தனர்.அங்கு நாமக்கல் நகர நிர்வாகிகள் துணையோடு அவரது கணவரை விசாரணை செய்தனர்.

ஷப்னா தன் கணவர் மறு திருமணம் செய்ய போவதாக கூறிய குற்றசாட்டு குறித்து விசாரிக்கப்பட்ட போது அதை அவர் மறுத்து விட்டார்.ஆனால் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ய பட்ட போது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதே போல அவரது கணவர் பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டு உள்ளார்மேலும் அவரது தந்தை மிக கொச்சையான வார்த்தைகளில் பேசி துன்புறுத்துவதாக சொன்ன குற்றச்சாட்டை மாவட்ட நிர்வாகம் விசாரித்த போது அதுவும் நிருபணம் ஆகியுள்ளது.இதற்கும் காரணம் அவர்கள் குடும்பத்தாரிடமும் மார்க்க சிந்தனையும்,மார்க்க பற்றும் இல்லாமையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளது

மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் கணவரது குடும்பத்தார் ஷப்னாவை தகாத வார்த்தைகளால் பேசி கொடுமை படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அடிப்படையில் இரண்டு தரப்பினரிடமும் தனி தனியாக விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் மாவட்ட நிர்வாகம்,மற்றும் மாநில நிர்வாகி முன்னிலையில் இருவரையும் வர வழைத்து விசாரிக்கப்பட்டு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி சேர்ந்து வாழ வைப்பதற்கான முயற்சிகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது

இதில் மமக மாவட்ட பொருலாளர் ஜாபர் சாதிக் தலைமையில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல் பஷீர்,தெற்கு இப்ராஹிம்,மமக மாவட்ட துணை செயலாளர் அப்துல் கரீம்,மற்றும் IPP மாவட்ட செயலாளர்கவிஞர் ஹக் ,தொண்டரணி செயலாளர் பெரோஸ்கான் யோர் கலந்து கொண்டனர்.இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசாவிட்டால் நாளை ஷஅபான் வழக்கில் முஸ்லிம் சட்டத்தின் மீது எப்படி பலி சுமத்தப்பட்டதோ,அதே போல இந்த ஷப்னா விவகாரத்திலும் நடைபெறும்,இன்னும் ஏராளமான ஷப்னாக்கள் உருவாகி விடுவார்கள் அதை தடுக்கவே தமுமுக மமக நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமாக செயல் பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் அனைத்து தரப்பட்டவர்கள் மீதும் தவறுகள் இருக்கிறது.மார்க்கத்தை பின்பற்றாத கணவர்,மார்க்கத்தை அறியாத மனைவி,ஆதரவு இல்லாதவர்களுக்கு கரம் கொடுக்க வேண்டிய ஜமாத்கள் கைவிட்டது போன்றவையே இந்த சம்பவம் நடைபெற மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது

இறுதியாக இந்த பதிவின் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு நம் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான்..தயவு செய்து தனி நபர் பிரச்சனைகளுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் பின்பற்றும் கொள்கைகள்,சட்டங்களுக்கு எதிராக பேசாதீர்கள்.எந்த பிரச்சனையாக ஜமாத்களை நாடி தீர்த்துக் கொள்ள முன் வாருங்கள்...ஜமாத் சரியில்லாத பட்சத்தில் அமைப்புகளிடமாவது உங்கள் பிரச்சனைகளை பதிவு செய்து தீர்வு காண முன் வாருங்கள்...ஓட்டுக் கேட்க உங்களுக்கு உதவ நாங்கள்

இல்லை...ஒட்டு மொத்த சமூக மக்களும் எங்கள் சகோதரன் என்கின்ற அடிப்படையில் சொல்கிறோம்.
ஒவ்வொரு மேடைகளிலும் இயக்கங்களை விமர்சித்து பேசும் உலமா பெரு மக்களே பிறரின் குறையை சொல்லி கிளாஸ் எடுக்கும் முன்பு உங்கள் ஜமாத் நிர்வாகத்திற்கு தர்பியத் கொடுங்கள் என்ற அன்பான வேண்டுகோளை வைக்கிறோம்.

தகவல்:
கோவை ஆசிக்அகமது தமுமுக  Fb

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.