திருவாரூர் அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு மரணம் !இன்னாலிலாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

தனியாக வீட்டில் இருக்கும் இருக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை. துணை இல்லாமல் இருக்காதீர்கள்.கவனாமாக இருங்கள்.

காவல்துறை உடனே கொலைக்காரர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கனும்.

தொடர் கொலை கொள்ளை வழிப்பறி சம்பவம் தமிழகம் முழுமையாக மக்களுக்கு பாதுகாப்பு சரியில்லாமல் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டுடன் உள்ளது.

தமிழ்க அரசு பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கனும்.காவல்துறையும் அதிகம் மக்களின் பாதுகாப்புக்கு கவனம் செலுத்தனும்.

நேற்று முன் தினம் I I -03-20I7 மாலை 6 மணியளவில் கூத்தாநல்லூர் அருகில் உள்ள தண்ணீர் குன்னம் என்ற ஊரில் முஸ்ஸீம் சமுதாயத்தை சார்ந்த நடுத்தர வயது பெண் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட செய்தி வாட்சப்பில் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
5 மணிவரை அவர் அவருடைய அம்மா வீட்டில் இருந்திருக்கிறார், அதன் பின்னர் கோழி அடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார், சென்ற சில நேரத்திலேயே இந்த கோர சம்பவம் நடந்திருக்கிறது.

பலரும் பலவிதமாக காரணம் சொன்னாலும், அதிகம் சொல்வது திருடனாக இருக்கலாம் என்று தான்.
தயவு செய்து தனியாக வீட்டில் இருப்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்கனும்.

அறிமுகம் இல்லாதவர்கள் இன்று அதிகம் உதவி கேட்டு நம் வீட்டுக்கு வருகிறார்கள், தண்ணி வேண்டும், முதியோர் இல்லத்திற்கு உதவி, அனாதை இல்லத்திற்கு உதவி இன்னும் பல காரணம் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கணும் இல்லேன்னா பாவம்னு சொல்லிருக்காங்க, அது எவ்ளோ பெரிய பாவமா இருந்தாலும் சரி, அறிமுகம் இல்லாதவங்க வந்தா கதவை திறக்காதீங்க, முக்கியமா பிள்ளைங்க மேல எப்பவும் ஒரு கண் வைங்க, நாம சொல்ற எதையும் பிள்ளைங்க கேட்காது, பிடிவாதமா தான் இருக்கும், நம்ம செல்லப்பிள்ளைகளை நாம தான் கவனமா பாத்துக்கனும்.

இதுபோன்ற தீய சக்திகளில் இருந்து நம் அனைவரயும் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக. ஆமீன்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.