முத்துப்பேட்டை அருகே ராஜஸ்தானியர் தயாரித்து விற்கும் அரிவாள், கோடரிகள்முத்துப்பேட்டை அருகே ராஜஸ்தான் தொழிலாளர்கள் கைவண்ணத்தில் தயாராகி  விற்பனைக்கு வந்துள்ள  அரிவாள், கோடரி  உள்ளிட்ட இரும்பு கருவிகளை  வாங்குவதில்   விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் முகாமிட்டுள்ளனர். அங்கு இரும்பிலான சிறிய,  பெரிய அரிவாள்கள், அலக்கு கத்தி, கோடரி, உளி, பாரை உள்ளிட்டவைகளை இத்தொழிலாளர்கள் அங்கேயே  பொதுமக்கள் கண் முன்னே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பின்னர் கடைவீதியோரங்களில் இப்பொருட்களை வரிசை கட்டி அடுக்கி ராஜஸ்தான் இளம்பெண்கள் விற்பனை செய்கின்றனர்.

  டெல்டா மாவட்டத்தில் அரிவாளுக்கு பிரபலமானது முத்துப்பேட்டை அடுத்துள்ள தம்பிக்கோட்டை அரிவாள்தான். சமீபகாலமாக முத்துப்பேட்டை பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியதால் அரிவாள் செய்யும் தொழிலை முழுவதும் விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு இப்பகுதியினர் மாறிவிட்டனர். ஆனால், தற்போது இப்பகுதி உட்பட தமிழகத்தில் பரவலாக  சமீபகாலமாக முகாமிட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தயாரிக்கும் இந்த பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதால்  இரும்புப் பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

  இதில் சிறப்பம்சம் என்னவெனில் பொதுமக்கள் கண் முன்னே இரும்புப் பட்டைகளை உருக்கி, வேண்டிய வடிவத்தில் பொருட்களை உருவாக்கித் தருகின்றனர். இவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலப்பொருளாக உள்ள இரும்புப் பட்டைகளை கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் பகுதியில் பழைய இரும்பு வியாபாரிகளிடம் பெறுவதாக கூறுகின்றனர். பெரும்பாலும் லாரிகள், பஸ்களில் பயன்படும் ஸ்பிரிங் பட்டைகளையே பயன்படுத்துகின்றனர். வேலைக்கென குடும்ப உறுப்பினர்களே இருப்பதால் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் குறைந்த விலையில் மலிவாக விற்பனை செய்கின்றனர். மரக்கரி துண்டுகளை புளோயர் எனப்படும் துருத்தி மூலம் ஊதி சூடாக்குகின்றனர். சுமார் 1,500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இரும்புப் பட்டையை சூடாக்கி, வாட்டி அது இளகி நெருப்புக் குழம்பு போல்இருக்கையில், சுத்தியலில் அடித்து தட்டி, வேண்டிய வடிவத்தில் இரும்பு உலோகங்களை தயாரிக்கும் லாவகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

 இதுகுறித்து வடமாநிலத் தொழிலாளர்கள் கூறுகையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இங்கு வந்து  பொருட்கள் தயாரித்து விற்று வருகிறோம். நாங்களே தயாரித்து விற்பதால் விலை மலிவாகக் கொடுக்க முடிகிறது. வியாபாரம் சிறப்பாக உள்ளது. வியாபாரம் குறையத் தொடங்கினால் வேறிடத்திற்கு மாறி செல்வோம்” என்றனர்.இவற்றை தேவைக்கேற்ப பேரம் பேசி ஆர்வமுடன் வாங்கி செல்லும்  விவசாயிகள் கூறுகையில், வயல் பகுதியில் வாய்க்கால் கரையில் மண்டியுள்ள கருவேல மரங்களை வெட்டி ஒழிக்கவும், வீட்டு தேவைக்கு விறகு சேகரிக்கவும் இப்பொருட்கள் தேவைப்படுகின்றன. வெளி மார்க்கெட்டை விட விலை குறைவாக இவை கிடைப்பதால் வாங்கி செல்கிறோம் என்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.