முத்துப்பேட்டை அருகே குவாரியில் மணல் எடுக்க எதிர்ப்பு லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த  தில்லைவிளாகம் துரைதோப்பில் தனியார் மணல் குவாரிக்கு அரசு தரப்பில் அனுமதியளிக்கபட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மணல்குவாரி திட்டம் செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை மணல் குவாரியிலிருந்து லாரிகளில் மண் ஏற்றி செல்வதாக அப்பகுதியினருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து கிராம மக்கள் குவாரி அருகே திரண்டனர். மணல் ஏற்றிவந்த லாரியை, சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்த முத்துப்போட்டை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குவாரியில் மண் எடுக்க தனியார் நிறுவனத்தினர் முறையான அனுமதி பெற்றுள்ளனர் என்று போலீசார் கூறினர். ஆனால் கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் உடன்படாமல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.