உத்திர பிரதேசத்தில் பாஜக வின் வெற்றி ராமர் கோவிலுக்கான வெற்றி:ஆர்எஸ்எஸ் கொக்கரிப்புசமீபத்தில் நடந்த உத்திர பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பாஜகவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் எம்.ஜி.வைத்தியா, பாஜகவின் இந்த வெற்றி ராமர் கோவிலுக்கான வெற்றி என்றும் ராமர் கோவில் கட்டுவதற்கு மக்கள் தெரிவித்த சம்மதம் என்றும் கூறியுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் ராமர் கோவில் கட்டுவதும் இடம்பெற்றிருந்தது என்றும் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்து மக்கள் அதன் தேர்தல் வாக்குறுதியை விரும்பி ஏற்றுக்கொண்டதை உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்தது என்றும் அது இருந்ததற்கான அடையாளங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது என்றும்  இதனால் இந்த பிரச்ச்சனைக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டவில்லை என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோவில் கட்ட சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.