முத்துப்பேட்டை அருகே சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட்டுமுத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கடைதெருவில் சூப்பர் மார்க்கெட் வைத்து இருப்பவர் தவமணி(40). இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்கள் லாரியில் வந்தது. இதற்காக கடையை திறக்க தவமணி வந்தார். அப்போது சூப்பர் மார்க்கெட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கடை கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து  உள்ளனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம்  மற்றும் பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.